இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பணம் செலுத்துவதற்கான வசதியை மேம்படுத்தும் நோக்கில், NPCI International Payments Limited (NIPL) நிறுவனம், UPI கட்டண முறையை இலங்கை முழுவதும் விரிவுபடுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்த முயற்சியின் மூலம், இந்திய பயணிகள் தங்களது மொபைல் செயலிகளின் மூலம் உடனடி மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் கட்டணங்களை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம் வலுப்பெறுவதோடு, இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகமான Unified Payments Interface (UPI), மொபைல் செயலி மூலம் உடனடி பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவும் ஒரு நவீன அமைப்பாகும். மாதத்திற்கு 20 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறும் இந்த முறை, உலகின் மிக முன்னேறிய டிஜிட்டல் கட்டண தீர்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த முறை இந்தியாவில் 700 மில்லியனுக்கும் அதிகமான வணிக இடங்களில் பயன்படுத்தப்படுவதோடு, இலங்கையின் LankaQR வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதால், இலங்கை முழுவதும் எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.
இலங்கைக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடு இந்தியாவாகும். 2024 ஆம் ஆண்டு 416,000 இந்தியர்கள் வருகை தந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 531,000 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், பணம் மாற்றுதல் அல்லது ரொக்க பணத்தை எடுத்துச் செல்லுதல் போன்ற சிக்கல்களை தவிர்த்து, நேரடியாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி மிக முக்கியமானதாக மாறியுள்ளது.
தற்போது Cinnamon Hotels & Resorts, Taj Hotels, Barista, Keells Super மற்றும் ODEL போன்ற முன்னணி நிறுவனங்களில் இந்த வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்காக, NIPL நிறுவனம் Central Bank of Sri Lanka மற்றும் உள்ளூர் வங்கிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்த முறையின் மூலம்,
* சுற்றுலாப் பயணிகள் தங்கள் இந்திய வங்கி கணக்குகளிலிருந்து நேரடியாக பணம் செலுத்த முடியும்
* மாற்று விகிதங்களை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்
* ரொக்கப் பயன்பாட்டை குறைக்க முடியும்
அதிகாரிகளின் கருத்து
இதுகுறித்து கருத்து தெரிவித்த NIPL நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான Ritesh Shukla,
“டிஜிட்டல் கட்டணங்கள் மூலம் நாடுகளை இணைப்பதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இலங்கையுடன் இணைந்து செயல்படுவது, பயணம் மற்றும் வணிகத்தை எளிதாக்குவதோடு, இரு நாடுகளுக்கும் பொருளாதார பலன்களை அளிக்கும் முக்கியமான முன்னேற்றமாகும், தொழில்நுட்பத்தின் மூலம் நாடுகளை ஒன்றோடொன்று இணைப்பதில் NPCI International உறுதிபூண்டுள்ளது.
இலங்கையுடனான எங்களது இந்த உறவுமுறையானது, டிஜிட்டல் கட்டணப் பயன்பாட்டை மேம்படுத்துதல், மில்லியன் கணக்கான மக்களுக்கு பயணம் மற்றும் வணிகத்தை எளிதாக்குதல், அத்துடன் இங்குள்ள வணிகங்களுக்கும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் பயன்களை வழங்குதல் ஆகியவற்றுக்கான இரு நாடுகளின் பொதுவான நோக்கத்தையே காட்டுகிறது. LankaPay உடன் இணைந்து அறிமுகப்படுத்தும் இந்த பாதுகாப்பான மற்றும் விரைவான கட்டண முறையானது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்பதில் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
UPI முறைமை மேலும் விரிவடையும் போது, ஹோட்டல்கள், கடைகள் மற்றும் பிற சுற்றுலா சேவைகளுக்கும் இந்த வசதியை வழங்குவதற்காக NIPL நிறுவனம் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து செயல்படும். உலகளவில் நிகழும் உடனடிக் கட்டணப் பரிவர்த்தனைகளில் 49%ஐ மேற்கொள்ளும், உலகின் மிகப்பெரிய கட்டண முறைமையாக UPI-ஐ சர்வதேச நாணய நிதியம் (IMF) அங்கீகரித்துள்ளது.
இது, இலங்கை வணிகர்களுக்கு இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு உயர்தர சேவையை வழங்குவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான வணிகத்தை மேம்படுத்துவதற்கும் கிடைத்துள்ள சிறந்த வாய்ப்பாகும் என்பதைச் சுட்டிக்காட்டலாம் என தெரிவித்துள்ளார்.
UPI கட்டண முறை மேலும் விரிவடையும் நிலையில், ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா சேவைகளில் இந்த வசதியை விரிவுபடுத்த NIPL தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்ட தரவுகளின்படி, உலகளாவிய உடனடி கட்டண பரிவர்த்தனைகளில் சுமார் 49% UPI மூலம் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.