இந்தியா பங்களாதேஷை வென்றது

புலாவாயோ, குவீன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (17) நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண சி குழு போட்டியில் பங்களாதேஷை டக்வேர்த் லூயிஸ் முறைமை (DLS) பிரகாரம் 18 ஓட்டங்களால் இறுக்கமான வெற்றியை இந்தியா ஈட்டியது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா சிரமத்துக்கு மத்தியில் 48.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது.

முதல் 3 விக்கெட்ளை 53 ஓட்டங்களுக்கு இழந்த இந்தியா பெரும் நெருக்கடிக்குள்ளானது.

ஆனால் வைபவ் சூரியவன்ஷி. அபிக்யான் குண்டு ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு ஆறுதல் அளித்தனர்.

வைபவ் சூரியவன்ஷி 67 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 72 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து மேலும் ஒரு விக்கெட் சரிந்தது. (119 – 5 விக்.)

இந் நிலையில் அபிக்யான் குண்டு, கனிஷ்க் சௌஹான் (28) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிரந்து இந்தியாவுக்கு தெம்பூட்டினர்.

அபிக்யான் குண்டு 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களைப் பெற்று 9ஆவதாக ஆட்டம் இழந்தார்.

பந்துவீச்சில் அல் பஹாத் 38 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் அஸிஸ்உல் ஹக்கிம் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இக்பால் ஹொசெய்ன் ஈமொன் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

239 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 17.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 88 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான நிலையில் இருந்தது.

அந்த சமயத்தில் மழை பெய்ததால் ஆட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் தடைப்பட்டது.

ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் பங்களாதேஷின் வெற்றி இலக்கு 29 ஓவர்களில் 165 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது.

தொடர்ந்து 21. 1 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றிருந்த பங்களாதேஷ், அதன் பின்னர் எஞ்சிய 8 விக்கெட்ளை 40 ஓட்டங்களுக்கு இழந்து தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் அஸிஸ்உல் ஹக்கிம் 51 ஓட்டங்களையும் ரிபாத் பெக் 37 ஓட்டங்களையும் கலாம் சித்திக்கி, ரிஸான் ஹொசன் ஆகிய இருவரும் தலா 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் விஹான் மல்ஹோத்ரா 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கிலான் பட்டேல் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்: விஹான் மல்ஹோத்ரா

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற