ஹூண்டாய் நிறுவனம், பேயன் என் லைன் காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த காரின் சோதனை ஓட்டம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள பேயன் மாடல் கார் தற்போது சில அப்டேட்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ஏற்கெனவே சந்தையில் உள்ள ஹூண்டாய் ஐ-20 மாடலிவிட சற்று மாறுபட்ட ஸ்போர்ட்டியான தோற்றத்தில், சிறிது பெரிதாக பேயான் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாருதி ஃப்ராங்ஸ் மாடல் காருக்கு போட்டியாக பேயான் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேயான் மாடலின் முன்புற பம்பர்கள், கிரில்கள், ஏர் டாம் ஆகியவை வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. எல்.டி. ஹெட்லைட்கள் மற்றும் டி.ஆர்.எல். தொழில்நுட்பங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.