இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளின் தலைவர்களுடன் இலங்கை தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடாத்த வேண்டும்!

மத்திய கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள போர் மோதல்கள் மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கங்களைக் குறைப்பதற்கு, இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளின் தலைவர்களுடன் இலங்கை தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது அவசியமானது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய போர்ச் சூழல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

“அமெரிக்காவும் இஸ்ரேலும் பிராந்திய நாடுகளின் மீது குண்டுகளை வீசித் தாக்குகின்றன. மறுபுறம் ஈரான், பிராந்தியத்தின் ஏனைய உறுப்பினர்களான வளைகுடா நாடுகளின் மீது தாக்குதல்களை நடத்துகின்றது.

கடல்சார் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய நமது கடல் பிராந்தியத்தில், ஈரானியக் கப்பல் ஒன்றை அமெரிக்கா நீர்மூழ்கிக் குண்டுத் தாக்குதல் மூலம் மூழ்கடித்துள்ளது.

இதற்கு முறையான எதிர்வினை ஆற்றாமை அல்லது குறைந்தபட்சப் பொறுப்பைக் கூட ஏற்காமை என்பது, இன்று நாம் அங்கீகாரமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை உணர்த்துகிறது.

அதேவேளை, அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதையும், ஐரோப்பிய நாடுகள் தமக்கிடையே பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதையும் நீங்கள் காண முடியும்.

ஆனால், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அத்தகைய எதனையும் காண முடியவில்லை. இத்தகைய நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் தனிப்பட்ட மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் இன்றி, நாம் எதிர்பார்க்கும் ஒருங்கிணைப்பை கட்டியெழுப்ப முடியாது.

நாம் அடிக்கடி சந்தித்துப் பேச வேண்டும். அரசியல் விவகாரங்கள், கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதார ஒருங்கிணைப்பு, மீன்பிடி, விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக பிராந்திய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாட வேண்டும் என நான் முன்மொழிகிறேன்.

நாம் நமது துறைமுகங்கள் மற்றும் விநியோக சேவைகளையும் மேம்படுத்த வேண்டும். எங்களிடம் கொழும்பு பாதுகாப்பு கலந்துரையாடல் மன்றம் உள்ளது. நாம் இணைந்து செயற்பட்டாலும், அரசியல் ரீதியான பார்வை குறித்து இன்னும் கவனம் செலுத்தவில்லை.

அமெரிக்கா இன்று உலகளாவிய விவகாரங்களில் இருந்து விலகிச் செல்கிறது. இது ஒருவகையில் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு வாய்ப்பளிப்பதாகக் கூறலாம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான ஒரு திட்டத்தை நாம் வகுக்க முடியும்.

இதன் மூலம், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்கள் ஊடாக, ஏனைய கடல் பிராந்தியக் குழுக்களைப் போல நமது பிராந்திய நாடுகளும் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவது குறித்து ஆராய முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

c

கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் மூவர் காயம்

March 13, 2026

நுவரெலியாவில் இருந்து சிவனொளிபாத மலைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.

iran

ஈரானின் உச்சத் தலைவர் காயம்?

March 13, 2026

ரானின் உச்ச தலைவர் ‘காயமடைந்து, சிதைக்கப்பட்டிருக்கலாம்’- அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஈரானுக்கு எதிரான தங்கள் இராணுவ நடவடிக்கையை அமெரிக்காவும் இஸ்ரேலும்

swi

யாழ். இளைஞன் சுவிஸில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு

March 13, 2026

சுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட யாழ். இளைஞன் உட்பட 6 பேர்

B_1

‘இந்துக்களின் சமர்’ ஆரம்பம்

March 13, 2026

இலங்கைத் தமிழர்களின் இரு வரலாற்றுப் புகழ்பெற்ற கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான 15-வது

vet

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்

March 13, 2026

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பில் உலக வங்கி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக யாழ் வந்த

456

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தாய்லாந்து விஜயம்

March 13, 2026

இலங்கையின் திறந்த பாராளுமன்றக் குழுவின் இணைத் தலைவரான மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், தாய்லாந்து பாராளுமன்றத்தை நேரில் சென்று

g

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி தப்பியோட முயற்சி?

March 13, 2026

காலி சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர், நேற்றைய தினம் சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயற்சித்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேக

nu

தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில் தாதியர் சேவைப் பயிற்சிக்கு 2918 பேர் நியமனம்

March 13, 2026

இலங்கையின் சுகாதாரத் துறையில் நிலவும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில்,

rav

மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் – ரவிகரன் எம்.பி

March 13, 2026

மகாவலி அதிகாரசபையின் ஆதரவுடனேயே வவுனியா வடக்கு, திரிவச்ச குளம் பகுதியில் பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற

is

அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் ஈரானில் 1,444 பேர் பலி

March 13, 2026

கடந்த 28ஆம் திகதி முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களில் 1,444 பேர் உயிரிழந்தனர். ஈரான்

ru

இலங்கைக்கான எரிபொருளை ரஷ்யாவிடம் இருந்து பெற அவசர சந்திப்பு

March 13, 2026

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை

poo

இலங்கையில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையில்…

March 13, 2026

நாட்டில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.