இங்கிலாந்துக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த அவுஸ்திரேலியா, பிறிஸ்பேணில் வியாழக்கிழமை (04) ஆரம்பித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியையும் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
இங்கிலாந்து: 334/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் ஆ.இ 138, ஸக் குறோலி 76, ஜொஃப்ரா ஆர்ச்சர் 38, ஹரி ப்றூக் 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 6/75, மைக்கல் நேஸர் 1/43, பிரெண்டன் டொக்கெட் 1/81, ஸ்கொட் போலண்ட் 1/87)
அவுஸ்திரேலியா: 511/10 (துடுப்பாட்டம்: மிற்செல் ஸ்டார்க் 77, ஜேக் வெதெரால்ட் 72, மர்னுஸ் லபுஷைன் 65, அலெக்ஸ் காரி 63, கமரன் கிறீன் 45, ட்ரெவிஸ் ஹெட் 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிறைடன் கார்ஸ் 4/152, பென் ஸ்டோக்ஸ் 3/113, வில் ஜக்ஸ் 1/34, ஜொஃப்ரா ஆர்ச்சர் 1/87, குஸ் அட்கின்ஸன் 1/114)
இங்கிலாந்து: 241/10 (துடுப்பாட்டம்: பென் ஸ்டோக்ஸ் 50, ஸக் குறோலி 44, வில் ஜக்ஸ் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: மைக்கல் நேஸர் 5/42, ஸ்கொட் போலண்ட் 2/47, மிற்செல் ஸ்டார்க் 2/64, பிரெண்டப் டொக்கெட் 1/56)
அவுஸ்திரேலியா: 63/2 (பந்துவீச்சு: குஸ் அட்கின்ஸன் 2/37)