இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராவது தனது கனவு என அவ்வணியின் முன்னாள் வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில், இங்கிலாந்து லயன்ஸ் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான முகாமில் பயிற்சியாளரொருவராக மொயின் இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் மூன்றாம் மட்ட தகுதிகாணுக்காக மொயின் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்கு தான் சிறப்பான பொருத்தமாக இருக்குமென மொயின் நம்புகின்றார்.