இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் டேவிட் பெக்கமிற்கு பட்டம்

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் டேவிட் பெக்கமிற்கு அந்நாட்டு மன்னர் சார்ல்ஸ் ‘நைட்ஹுட்’ (Knighthood) பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளார்.

டேவிட் பெக்காம், கால்பந்து மற்றும் பிரித்தானிய மக்களுக்கு ஆற்றிய சேவைகளுக்காக பாராட்டி நைட்ஹுட் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் மன்னர் சார்ல்ஸின் பிறந்தநாள் கௌரவப்பட்டியலில் இடம்பிடித்த 50 வயதான டேவிட் பெக்காமிற்கு, செவ்வாயன்று (04) பெர்க்ஷயரில் நடந்த விழா ஒன்றில் வைத்து மன்னர் இந்தப்பட்டத்தை வழங்கினார்.

இதன்போது “நான் பெருமைப்படுகிறேன்,” “நான் எவ்வளவு தேசபக்தி கொண்டவன் என்பது மக்களுக்குத் தெரியும் – நான் என் நாட்டை நேசிக்கிறேன்”.”என் குடும்பத்திற்கு முடியாட்சி எவ்வளவு முக்கியம் என்பதை நான் எப்போதும் கூறி வருகிறேன்” எனத் தெரிவித்தார்.

“நைட்ஹுட்” என்பது பிரித்தானியாவில் (UK) வழங்கப்படும் ஒரு கௌரவப் பட்டமாகும்.

பெக்கமுடன் அவரது மனைவி விக்டோரியா மற்றும் அவரது பெற்றோர் சாண்ட்ரா மற்றும் டேவிட் ஆகியோர் வின்ட்சர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

“என் உடையை பார்த்தபோது மன்னர் சார்ல்ஸ் மிகவும் ஆச்சரியப்பட்டார். எனக்குத் தெரிந்தவரை மன்னர் மிகவும் நேர்த்தியாக உடையும் மனிதர். அவரது ஸ்டைல் பல வருடங்களாக என்னை ஈர்த்தது. இந்த உடையையும் அவரை பார்த்தே தெரிவு செய்தேன். இந்த தோற்றத்துக்கும் அவர்தான் காரணம்.

இந்த ஆடை என் மனைவி எனக்காக வடிவமைத்தது. மன்னர் சார்ல்ஸ் இளமையில் அணிந்திருந்த காலை நேர ஆடை புகைப்படங்களைப் பார்த்தேன். ‘நானும் அப்படித்தான் அணிய வேண்டும்’ என தீர்மானம் செய்து, அந்த வடிவமைப்பை என் மனைவிக்கு கொடுத்தேன்; அவர் அதை அருமையாக வடிவமைத்து கொடுத்தார்” என்றார்.

இங்கிலாந்து அணி சார்பில் 115 போட்டிகளில் விளையாடிய பெக்கம் 2000 முதல் 2006 வரை ஆறு ஆண்டுகள் தேசிய அணித் தலைவராக பணியாற்றியுள்ளார்.

மூன்று உலகக் கிண்ணத் தொடர்கள், இரண்டு யூரோ கிண்ணப் போட்டிகளிலும் பங்கேற்றார்.

மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் போன்ற பிரபல கழகங்களுக்கு விளையாடியவர் ஆவார்.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்