இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 3-வது மற்றும் தீர்மானமிக்க ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 53 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்துள்ளது. இது இலங்கையில் இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டியில் பதிவு செய்த அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.

போட்டியில் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடிய ஜோ ரூட், தனது 20-வது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 111 ஓட்டங்களைக் குவித்து அணியின் ஓட்ட உயர்வுக்கு அடித்தளமிட்டார்.

இங்கிலாந்து அணித் தலைவர் ஹாரி ப்ரூக் மைதானத்தில் வாணவேடிக்கை காட்டினார். வெறும் 57 பந்துகளில் சதம் விளாசிய அவர், 137 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது அவரது 3-வது ஒருநாள் சதமாகும்.

இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் 65 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.

இங்கிலாந்து அணி தனது துடுப்பாட்ட வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தி, சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அஹமதுவை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது. அவர் 24 ஓட்டங்களை எடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான பென் டக்கெட் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இலங்கை பந்துவீச்சாளர்கள், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தின் அதிரடி ஆட்டத்தைக் கட்டுப்படுத்தத் திணறினர். வனிந்து ஹசரங்க மற்றும் ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும், ஓட்டங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அதன்படி, 358 என்ற இமாலய இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தார். பின்னர் களமிறங்கிய இளம் வீரர் பவன் ரத்நாயக்க, தனி ஒருவராகப் போராடி தனது முதலாவது ஒருநாள் சர்வதேச சதத்தைப் (121 ஓட்டங்கள்) பதிவு செய்தார்.

எனினும், மறுமுனையில் விக்கெட்டுகள் சீராக வீழ்ந்ததால், இலங்கை அணியால் இலக்கை அடைய முடியவில்லை. போட்டியின் 47-வது ஓவரில் சேம் கரன் பவன் ரத்நாயக்கவை போல்ட் செய்ததன் மூலம் இங்கிலாந்து அணியின் வெற்றி உறுதியானது.

இலங்கை அணி சார்பில் பவன் ரத்நாயக்க 121 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க: 50 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு

tea

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்கான அதிபர் பதவிகளைப் பொறுப்பேற்க தயங்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள்?

March 3, 2026

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் பதவிகளுக்கு, அச்சேவையைச் சேர்ந்த பெரும்பாலான அதிகாரிகள் விண்ணப்பிக்க முன்வரவில்லை என்று ஆசிரியர்

d

நாட்டின் பிரதம நீதியரசர் மன்னாருக்கு விஜயம்

March 3, 2026

ட்டின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாருக்கு விஜயம்

nan

‘சாகர’, ‘நந்திமித்திர’ கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன!

March 3, 2026

இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கிழக்கு இந்தியப் பெருங்கடல் கடற்கரையை மையமாக கொண்டு பெப்ரவரி 18 முதல் 26 வரை

iran

ஈரானில் இதுவரை 787 பேர் உயிரிழப்பு – செஞ்சிலுவைச் சங்கம்

March 3, 2026

ஈரான் மீது இடம்பெற்ற அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களின் விளைவாக இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தகவல்

cham

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணி இடைநிறுத்த விவகாரம்: ரிட் மனு மார்ச் 18 இல் விசாரணைக்கு!

March 3, 2026

எவ்வித நியாயமான விசாரணையுமின்றி தனது பணி இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் ரிட் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்றத்தின்

amazo

அமேசான் நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் நிறுவனத்தின் பல

masoo

அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெறுகின்றன – ஈரான் ஜனாதிபதி

March 3, 2026

தனது நாட்டுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஈரான்

Ruvan Ranasinga

சுற்றுலாப் பயணிகளின் வருகை சரிவு?

March 3, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை அடைய முடியவில்லை