ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில், கோல்வ் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கையின் காயா தலுவத்த திங்கட்கிழமை (27) காலை நாடு திரும்பினார்.
பஹ்ரெய்னில் நடைபெற்றுவரும் 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில், கொல்வ் போட்டிகள் அக்டோபர் 23ஆம் திகதி ஆரம்பமாகி 25ஆம் திகதி நிறைவுபெற்றது.
இரண்டு சுற்றுகளைக் கொண்ட பெண்களுக்கான தனிநபர் கோல்வ் போட்டியை 133 நகர்வுகளில் நிறைவு செய்த காயா தலுவத்த 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். அப் போட்டியில் சீன வீராங்கனைகள் இருவர் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.