லண்டனை சேர்ந்த குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) நிறுவனம் சர்வதேச அளவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களில் இந்த ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிய அளவிலான தலைசிறந்த பல்கலைக்கழகங்களுக்கான முதல் 100 இடத்தில் இந்தியாவின் 7 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆசியாவின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் முதல் 100 இடத்தில் இந்தியாவில் இருந்து 7 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் தமிழ்நாட்டில் இருந்து மெட்ராஸ் ஐஐடி ஆசிய அளவில் 70வது இடமும், இந்திய அளவில் 3வது இடமும் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மற்றொரு கல்வி நிறுவனமாக வேலூர் விஐடி, ஆசிய அளவில் 156வது இடமும், இந்திய அளவில் 13வது இடமும் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் மாநில பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் 204வது இடமும், இந்தியாவில் 21வது இடமும் பெற்றுள்ளன.
அதே போன்று, முதல் 500 இடங்களில் தமிழ்நாட்டில் இருந்து 13 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 4 மாநில அரசு பல்கலைக்கழகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.