“ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களின்” பட்டியலில் நுவரெலியாவும்

உலகின் முன்னணி டிஜிட்டல் சுற்றுலா இணையத்தளமான Agoda, இந்த ஆண்டுக்காக பெயரிட்டுள்ள “ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களின்” பட்டியலில் இலங்கையின் மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள நுவரெலியாவையும் உள்ளடக்கியுள்ளது.

மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் Agoda இணையத்தளம், உலகின் மிகப்பெரிய சுற்றுலாச் சேவை வழங்கும் தளங்களில் ஒன்றாகும். அந்த இணையத்தளம் நுவரெலியாவை ‘சின்ன இங்கிலாந்து’ (Little England) என வர்ணித்துள்ளது.

இதமான காலநிலையைக் கொண்ட நுவரெலியா, உயர்தர தேயிலை உற்பத்திக்கு சர்வதேச ரீதியில் பெரும் புகழ்பெற்றதாகும். அங்குள்ள பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் காலனித்துவ காலக்கட்ட கட்டிடங்களுக்கு மத்தியில் பயணம் செய்வது, சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் சுவாரஸ்யமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த அனுபவத்தைத் தரும் என Agoda சுட்டிக்காட்டியுள்ளது.

Agoda-வின் இந்த மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் நுவரெலியாவுடன் பின்வரும் இடங்களும் இடம்பிடித்துள்ளன:

இந்தியாவின் சிம்லா மற்றும் மூணாறு மலைப்பகுதிகள்.

மலேசியாவின் கெமரன் ஹைலண்ட்ஸ் (Cameron Highlands).

வியட்நாமின் சபா (Sapa) மலைப்பகுதி மற்றும் பிரான்ஸ் காலனித்துவ தாக்கத்தைக் கொண்ட தலாட் (Dalat).

இந்தோனேசியாவின் பண்டுங் (Bandung) பிரதேசம்.

பூட்டானின் திம்பு (Thimphu) நகரம்.

தற்போது 39 மொழிகளில் சேவையாற்றும் Agoda இணையத்தளம் ஊடாக, 6 மில்லியனுக்கும் அதிகமான ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு