அலி கமேனி; சுரங்கத்தில் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலால் பதற்றம்

ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை தொடங்கலாம் என்ற சூழலில், ஈரான் ஆட்சியாளரான மதகுரு கமேனி சுரங்கத்தில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில், கிட்டத்தட்ட 5000க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். இதை கண்டித்து, ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு 25 நாடுகள் ஆதரவு தெரிவிக்க, இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

ஈரானில் பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது.

போராட்டத்தை முடக்கக்கூடாது என்று அமெரிக்கா கூறி உள்ளதோடு, மீறினால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானை தாக்கவும் தயங்க மாட்டோம் என்று அவர் வெளிப்படையாகவே எச்சரிக்கையும் விடுத்தார்.

ட்ரம்பின் இத்தகைய அறிவிப்பை தொடர்ந்து, போர்க்கப்பல்கள், போர் விமானங்களை ஈரானை சுற்றியுள்ள இடங்களில் அமெரிக்கா நிலை நிறுத்தி உள்ளது.

அமெரிக்காவின் இந்த அதீத மிரட்டல் எதிரொலியாக, ஈரான் மீது எந்த நிமிடத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நிலையில் அந்நாட்டு ஆட்சியாளர் மதகுரு கமேனி பாதுகாப்பு கருதி சுரங்கத்திற்குள் பதுங்கி உள்ளார்.

அவரின் 3வது மகன் மசூத் கமேனி தற்போது ஆட்சி நிர்வாகத்தை கவனித்து வருகிறார். அமெரிக்காவின் தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்பதால் ஈரானில் இணைய வசதிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

கடந்தாண்டு ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்று குற்றம்சாட்டி இஸ்ரேல் ஈரானை தாக்கியது.

அப்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானில் உள்ள 3 முக்கிய அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா அதிரடியாக தாக்கியது. அப்போதும் கமேனி சுரங்கம் ஒன்றில் பாதுகாப்பாக பதுங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய