தமிழ் திரையுலகின் ஒப்பற்ற குணச்சித்திர நடிகர்களான மைம் கோபி – தீனா ஆகியோருடன் அறிமுக நடிகர் அனீஸ் மாசிலாமணி கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘ஃப்ரைடே’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃப்ரைடே’ எனும் திரைப்படத்தில் தீனா, அனீஸ் மாசிலாமணி ,மைம் கோபி, ராம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜானி நாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தூமே இசைமமைத்திருக்கிறார்.
கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தக்தம் மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனீஸ் மாசிலாமணி தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 28 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் – வடசென்னையில் கடல் மற்றும் கடல் சார்ந்த வாழ்வாதாரத்தில் நிழல் உலகத்தை சார்ந்தவர்களின் குற்றப் பின்னணியை விவரிக்கும் காட்சிகள் உணர்வுபூர்வமாக இடம் பிடித்திருப்பதால்.. பார்வையாளர்களிடத்தில் படத்தைப் பற்றிய குறைந்தபட்ச எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.