சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது.
குழு இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டியின் தமது முதற் போட்டியில் இலங்கையை ஏற்கெனவே வென்றிருந்த இங்கிலாந்து, பல்லேகலவில் தற்போது முடிவுக்கு வந்த பாகிஸ்தானுக்கெதிரான போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதை உறுதிப்படுத்தியது.