அரச அலுவலர்களுக்கு விசேட அறிவுறுத்தல்

அரச அலுவலர்கள் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவர்களது வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே அறிவுறுத்தியுள்ளார்.

சமூக சக்தி (பிரஜாசக்தி) வறுமையை ஒழிப்பதற்கான தேசிய வேலைத் திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விழிப்புணர்வு நேற்றைய தினம் தந்தை செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், கிராமிய வறுமையை ஒழிக்காமல் நாட்டின் வறுமையை ஒழிக்க முடியாது. ஜனாதிபதியின் எண்ணக்கருவான “வளமான நாடு அழகான வாழ்க்கை” என்பதற்கு இணங்க, நாட்டை வளமான நாடாக மாற்ற முதலில் கிராமங்களை வளமாக்க வேண்டும். நாட்டில் வாழும் அனைத்து இன மக்களின் வாழ்வை விரிவுபடுத்த வேண்டும்.

இலங்கையிலுள்ள அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் இத்திட்டத்தை முன்னெடுக்கப்படும். இதுவரை காணப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களை விட இது மாறுபட்ட திட்டமாக காணப்படுகிறது. இத்திட்டத்தின் ஆரம்பமும் முடிவும் மக்களாகவே இருக்க வேண்டும்.

மக்களே முதன்மையாக இருப்பதால் நிகழ்ச்சித் திட்டம் உயிர்ப்புடன் இருப்பதுடன், இறுதியாக அதன் பலன்கள் மக்களையே சென்றடைய வேண்டும். மேலும், பிரஜாசக்தி திட்டத்தை ஒருங்கிணைந்த திட்டமாக மேற்கொள்ள வேண்டும்.

மேலும், கிராம மக்களோடு கலந்துரையாடி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப வேண்டும். அரச அலுவலர்கள் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவர்களது வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும். நாட்டில் வாழும் அனைத்து மக்களின் பொருளாதார சமூக நிலை மேம்பாடு அடைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

5

ஹோர்மூஸ் நீரிணை அருகே 6 கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்

March 13, 2026

மேற்காசியாவில் நிலவும் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான மோதல்

ir

உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை இன்று ஈரானுக்கு அனுப்ப நடவடிக்கை

March 13, 2026

இலங்கைக்குத் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு இலக்காகி மூழ்கடிக்கப்பட்ட’IRIS DENA’ கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்கள்

Poli

பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

March 13, 2026

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளான மிரிஹான, மஹரகம, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில், வீட்டு

suni

எவ்வித அரசியல் பாகுபாடுமின்றி உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

March 13, 2026

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எவ்வித அரசியல் பாகுபாடுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தவறு செய்யாத எவரும் இது

download

ஈழத்தமிழ் அகதிகள் இந்தியக் குடியுரிமை பெற விரும்பினால் அதனை வழங்குங்கள் – சுமந்திரன்

March 13, 2026

இந்தியாவிலேயே மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வாழ்ந்து, அங்கேயே குடியுரிமை பெற விரும்பும் ஈழத்தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கும்

28

ஒன்டாரியோவில் பணியிடை நீக்கப்பட்ட மருத்துவர் மீது மேலும் 28 பாலியல் முறைகேடு குற்றங்கள்?

March 13, 2026

வடக்கு சஸ்காட்சுவானில் பொது சுகாதார சேவைகளை வழங்கியதுடன் ஒன்டாரியோவில் உளவியல் சிகிச்சை வழங்கியிருந்த பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு மருத்துவருக்கு எதிராக

crime (1)

தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு; இருவர் கைது!

March 13, 2026

மாத்தறை – திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுவெல்ல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (12) இரவு இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நபர்

h

பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான சமூக சூழலை உருவாக்க வேண்டும் – பெண்கள் அமைப்புக்கள்

March 13, 2026

சூழல் மற்றும் சமூகத்தின் அபிவிருத்தியை வலுவூட்டும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் சமூக மட்டத்தில் சேவைகளை வழங்கிவரும் அமைப்புக்களின் பெண் பிரதிநிதிகளை

jai

விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு: 586 பேர் கைது!

March 13, 2026

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (12) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 586 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்

inte

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை!

March 13, 2026

எதிர்வரும் பண்டிகைக் காலங்களைக் குறிவைத்து இணையத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பாரிய நிதி மோசடிகள் மற்றும் தரவுத் திருட்டுகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த

death w

பஸ் மோதி பெண் உயிரிழப்பு!

March 13, 2026

தங்கல்லை – ரன்ன வீதியின் நெடொல்பிட்டிய பகுதியில் பஸ் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வியாழக்கிழமை

up

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கௌரவம்!

March 13, 2026

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்கள், மன்றத்தின் தலைவி ஷண்முகப்பிரியா கார்த்திகேசு தலைமையில் கிறேஹெட் தமிழ்