அரசு ‘பொய் நாடகம்’ ஆடுகிறது: தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு உறுதி இல்லை!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் எழுத்து மூலமான எந்த உறுதியும் இல்லை. அதனால் இன்னும் ஒருசில மாதங்கள் சென்ற பின்னர் அதுவும் அரசாங்கத்தின் பொய் நாடகம் என்பது சமூக மயமாகும்போது தெரியவரும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிச் செயலாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் கொட்டலகயில் இடம்பெற்ற கூட்டத்துக்கு வருகை தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் எனக்கும் அழைப்பு விடுத்திருந்தார். என்றாலும் குறித்த தினம் நான் கொழும்பில் இருந்தமையால் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாமல் போயிருந்தது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது அதிகரித்து வழங்கப்பட்டிருக்கும் சம்பள அதிகரிப்பு எழுத்து பூர்வமாக இல்லை என்றே பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்து வருகிறார். அந்த சம்பள அதிகரிப்பானது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வேண்டுகோளுக்கமைய, புரிந்துணர்வின் பிரகாரமே தோட்ட நிறுவனங்கள் குறித்த சம்பள அதிகரிப்பை வழங்கி இருக்கின்றன.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த சந்தர்ப்பத்திலும் இவ்வாறான கோரிக்கையை தோட்ட நிறுவனங்களுக்கு விடுத்திருந்தார்.. என்றாலும் ரணில் விக்ரமசிங்க குறுகிய காலத்துக்கே ஜனாதிபதியாக இருக்கப்போகிறார் என்பதால், தோட்ட நிறுவனங்கள் அதற்கு இணங்கவில்லை. தற்போது அநுரகுமார திஸாநாயக்க இன்னும் 4வருடங்களுக்கு ஜனாதிபதியாக இருக்கப்போகிறார். அதனால் தோட்ட நிறுவனங்கள் அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, இந்த மாதத்தில் குறித்த சம்பள அதிகரிப்பு தோட்ட ஊழியர்களுக்கு வழங்கி இருக்கிறது.

தோட்டங்களில் 3இலட்சமாக இருந்த ஊழியர்கள் தற்போது 60ஆயிரம் வரை குறைந்திருக்கிறது. தோட்டங்களி்ல் இருக்கும் தொழிற்சங்கங்களில் தற்போது உறுப்பினர்கள் இல்லை. அதனால் இந்த துறையை பாதுகாத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. அத்துடன் ஜீவன் தொண்டமானுக்கு இந்த துறையில் நல்ல அனுபவம் இருக்கிறது. அதனால் அவர் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தெரிவித்து வரும் விடயம் உண்மை. அதனால் அரசாங்கம் இதுவரை தெரிவித்து வந்த பொய் பிரசாரங்கள் போன்றே தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பும் இன்னும் ஒருசில மாதங்கள் சென்ற பின்னர் அதுவும் அரசாங்கத்தின் பொய் நாடகம் என்பது சமூக மயமாகும்போது தெரியவரும் என்றார்.

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்