அரசின் கிவுல் ஓயா திட்டத்தை எதிர்க்க நாம் அனைவரும் ஒன்று கூட வேண்டும்

சித்தாண்டி சமூக ஒன்றியம் நாடாத்தும் மாபெரும் பொங்கல் விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் சித்தண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத ஆலய முன்றலில் நேற்று (31) நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன கலந்து கொண்டார்.

இதன் போது அங்கு கருத்து தெரிவித்த அவர்,

தற்போது அரசாங்கம் கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்கின்றது. இதில் வவுனியா மாவட்டத்தில் தமிழர்களுக்கு சொந்தமான கிட்டத்தட்ட 13,000 ஏக்கரிற்கும் அதிகமான நிலப்பரப்பினை அழித்து மணலாறு பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்ட 4,000 சிங்கள குடும்பங்களுக்கு நீர் வழங்க இத் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

இத் திட்டம் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ காலத்தில் இத் திட்டங்கள் கொண்டுவர எத்தனிக்கப்பட்ட போது தடுத்து நிறுத்தப்பட்டன.

கடந்த ஆட்சிக் காலத்தில் சித்தாண்டியில் மயிலத்தமடு மாதவனை பிரச்சனை காரணமாக பல தமிழ் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கான எதிர்ப்பினை சென்ற ஆண்டுகளில் தனி ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நீதியை நிலை நாட்டும் நோக்கில் இன்றளவிலும் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றேன்.

இப் பிரச்சனை முற்றுப்பெற்ற விடயமாக காணப்படினும் அது இன்று வரை முடியவில்லை. 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப் பிரச்சனைகள் மீள உருவெடுக்கின்றதோ அதே போல மயிலத்தமடு மாதவனை பிரச்சனையும் உருவெடுக்கும்.

மிகுந்த சிரமப்பட்டு நாங்கள் மயிலத்தமடு மாதவனை பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்ததை சிலர் மறந்து விட்டனர். ஆனால் இந்த நிலம் சம்மந்தமான போராட்டங்களை நாம் முன்னெடுப்பது பண்ணையாளர்களுக்காகவோ, தனிப்பட்ட குழுவினருக்காகவோ அல்ல மாறாக தமிழினத்துக்காகவே எமது மக்களுக்காகவே. கிவுல் ஓயா திட்டத்தை முழுமையாக முறியடிக்க தமிழ் மக்களாகிய நாம் ஒன்றிணைய வேண்டும். ஒற்றுமையே எமது பலம் என தெரிவித்தார்.

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு