அரசாங்கத்திற்கு எதிரான நாளைய ஆர்ப்பாட்டத்தை தமிழ் மக்களும் தமிழ் கட்சிகளும் முற்றாக புறக்கணிக்க வேண்டும் – ந. ரவிகுமார்

நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலைகைளை நுணுக்கமாக கவனித்துப் பார்ப்பதற்காக, நாளை நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் சில எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்துள்ள அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கான எமது தெளிவான மற்றும் பொறுப்பான நிலைப்பாட்டை அறிவிக்க விரும்புகிறோம்.

இன்று நாட்டில் உருவாகி வரும் அரசியல் மாற்றங்கள், சிறுபான்மை தமிழ் மக்களுக்கு வரலாற்றில் இதுவரை கிடைக்காத அளவுக்கு புதிய வாய்ப்புகளையும் சாதகமான சூழலையும் வழங்கி வருகின்றன. சுதந்திரம் கிடைத்தது முதல் 76 ஆண்டுகளாக ஆட்சி செய்த பெரும்பாலான அரசுகள் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தையும் அடிப்படை உரிமைகளையும் புறக்கணித்ததோடு, சில நேரங்களில் அவர்கள் மீது ஒடுக்குமுறைகளை நிகழ்த்திய காலப்பகுதிகளும் இருந்தன. இந்நிலையில், தற்போது திசைமாற்றத்தை உருவாக்கும் ஒரு அரசாங்கம் அதிகாரத்தில் இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாகும்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா தலைமையில் செயல்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தனது முதல் ஆண்டிலேயே கணிசமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஊழல் தடுப்புக்கு வலுவான நடைமுறைகள், பொருளாதார மீட்புக்கான திடமான நடவடிக்கைகள், கல்வித் துறையில் நீண்டகாலமாக தேவைப்பட்ட சீர்திருத்தங்கள் போன்ற முக்கிய துறைகளில் அரசு மக்களின் நம்பிக்கையை மறுபடியும் கட்டியெழுப்பியுள்ளது. குறிப்பாக மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வு, பல தலைமுறைகளாக புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்துக்கு கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிதியாகக் கருதப்படுகிறது.

தமிழ் மக்களின் நீண்டகால தேவைகள், அரசியல் கோரிக்கைகள், பாதுகாப்பு மற்றும் சமத்துவ உரிமைகள் ஆகியவற்றில் அரசு காட்டி வரும் நேர்மையான அணுகுமுறையைப் பொருட்படுத்தாமல் போராட்டங்களில் ஈடுபடுவது தமிழ் சமூகத்தின் எதிர்கால நலனுக்கும் பாதகமாகும்.

கடந்த கால அரசியல்வாதிகள் நாட்டைப் பொருளாதாரரீதியாக வீழ்ச்சியடையச் செய்ததும், சிறுபான்மை மக்களின் வாய்ப்புகளையும் உரிமைகளையும் ஒடுக்கியதும் அனைவரும் அறிந்த உண்மை.

இன்றோ புதிதாக உருவாகும் அரசியல் பண்பாட்டால் மக்கள் மத்தியில் ஆதரவு இழக்க வேண்டிய அச்சத்தில் சில எதிர்க்கட்சிகள் மக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் தேவையற்ற போராட்டங்களை ஊக்குவித்து வருகின்றன. இந்த ஆர்ப்பாட்டமும் அதே போன்ற அரசியல் அச்சத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், தமிழ் மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் நுகேகொடையில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணிப்பதே பொறுப்பான முடிவாகும். நாட்டை இனத்துவ வேறுபாடின்றி சமமாக நடத்தும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவின் தலைமையிலான அரசாங்கத்துக்கு தமிழ் மக்களின் ஆதரவு தொடர வேண்டும். இந்த அரசாங்கம் சரியான திசையில் நாட்டைக் கொண்டு செல்கிறது என்பது தெளிவாகத் தெரியும்போது, தேவையற்ற குழப்பங்கள் மற்றும் பொய்யான அரசியல் விளம்பரங்களின் பாதையில் மக்கள் செல்ல வேண்டிய அவசியமில்லை.

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராக நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தனது வலுவான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சினைகளையும் நாட்டின் நீண்டகால முன்னேற்றத்தையும் கணக்கில் கொண்டால், இவ்வாறான போராட்டங்கள் நாட்டிற்கு எந்தவித நன்மையயும் ஏற்படுத்தாது என்பதும் தெளிவாகும். நாட்டின் அரசியல் நிலைத் தன்மை, பொருளாதார மீட்பு மற்றும் இன ஒற்றுமையப் பாதுகாப்பதற்காக மக்களும் அனைத்து சமூகங்களும் பொறுப்புடன் நடந்து கொள்வதை எமது கட்சி வலியுறுத்துகிறது.

நாட்டின் முன்னேற்றமும் மக்களின் நலனும் கருதி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா அவர்களின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுக்கு தமிழ் மக்களும் தமிழ் கட்சிகளும் தமது உறுதியான ஆதரைவத் தொடர்ந்து வழங்க வேண்டும் எனபதே எமது தாழ்மையான வேண்டுகோள்.

By C.G.Prashanthan

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்