அரசாங்கத்திற்குள்ளேயே முரண்பாடு காணப்படுகிறது: ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் எவ்வித கருத்து வேறுபாடுகளும் இல்லை என்றும், இது குறித்து அரசாங்கத்திற்குள்ளேயே பாரிய முரண்பாடுகள் காணப்படுவதாகவும் கோட்டை மாநகர சபை உறுப்பினர் சமத் விஜேசுந்தர தெரிவித்தார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,

கல்விச் சீர்திருத்தங்களை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பதாக அரசாங்கத் தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்தார். இந்நாட்டிற்கு கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது தமக்குப் பழக்கமான அரசியல் முகாம்களைச் சேர்ந்த சிரேஷ்ட அரசியல்வாதிகளே எனக் குறிப்பிட்ட அவர், தமது கட்சி ஒருபோதும் சீர்திருத்தங்களுக்கு எதிராகச் செயற்படவில்லை என்றும், அரசாங்கம் முன்வைத்துள்ள திட்டங்களில் உள்ள குறைபாடுகளையும் நடைமுறைச் சிக்கல்களையும் மட்டுமே சுட்டிக்காட்டியதாகவும் விளக்கமளித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த போது பிரதமர் ஹரிணி அமரசூரிய இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாகக் குறிப்பிட்ட போதிலும், இறுதியாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இச்சீர்திருத்தங்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

இதிலிருந்து ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு இடையில் பாரிய கொள்கை முரண்பாடு இருப்பது உறுதியாகியுள்ளதாகவும், அரசாங்கம் தனது உள்வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, அதற்காக எதிர்க்கட்சியைக் குறை கூறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் பாடசாலைகளுக்கு ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகளை வழங்கிய போது அதனை ஏளனம் செய்தவர்கள், இன்று கல்விச் சீர்திருத்தங்களுக்குத் தொழில்நுட்ப வசதிகள் அவசியம் எனக் கூறுவது வேடிக்கையானது என அவர் சாடினார்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட “ஐக்கிய கல்வி சம்மேளனத்” தலைவர் பிரியந்த பத்தேபெரிய கருத்துத் தெரிவிக்கையில், முறையான கலந்துரையாடல்கள் இன்றி ஆசிய அபிவிருத்தி வங்கியின் தேவைக்காக அரசாங்கம் அவசரமாக இந்தச் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயன்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

பாடசாலைகளின் உட்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தை மேம்படுத்தாமல், ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சியளிக்காமல் இவ்வாறான மாற்றங்களைச் செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கல்விச் சீர்திருத்தங்கள் தோல்வியடைந்தமைக்கும், அதனைத் திரும்பப் பெற்றமைக்கும் கல்வி அமைச்சராகப் பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் தவறுகளைத் திருத்தி முறையான கல்விச் சீர்திருத்தங்களை அரசாங்கம் முன்வைத்தால், அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய