அமைதி நோபல் பரிசு வென்ற நர்கெஸ் முகமதி கைது

2023 ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வென்ற மனித உரிமைப் போராளி நர்கெஸ் முகமதியை, ஈரானிய பாதுகாப்புப் படையினர் நேற்று கைது செய்தனர்.

அண்மையில் காலமான ஒரு வழக்கறிஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு நர்கெஸ் முகமதிசென்றபோது, இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிகாரிகள் நர்கெஸ் முகமதியை பலவந்தமாகப் பிடித்துச் சென்றதாக அவருடைய ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.

நர்கெஸ் முகமதி, ஈரான் நாட்டில் பல ஆண்டுகளாகப் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து போராடி வருபவர்.

குறிப்பாக, ஈரானில் பெண்களின் உரிமைகளை பறிக்கும் கட்டாய ஹிஜாப் சட்டங்களுக்கு எதிராகவும், பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவதை ஆதரித்தும் அவர் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார்.

ஈரானில் நடந்த ‘பெண், வாழ்வு, சுதந்திரம்’என்ற இயக்கத்தின் முக்கியப் பங்களிப்பாளர்களில் நர்கெஸ் முகமதியும் ஒருவர். அவருடைய மனித உரிமைகளுக்கான சேவையை போற்றும் விதமாக, அவருக்கு கடந்த 2023ஆம் ஆண்டு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நேரத்தில் கூட, அவர் சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறையில் இருந்தபடி, ஈரான் அரசுக்கு எதிராக அவர் எழுதிய கட்டுரைகளும் செய்திகளும் உலக அளவில் கவனத்தை ஈர்த்தன.

நர்கெஸ் முகமதி இதுவரை 10 இற்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவர் மொத்தமாக 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 154 சவுக்கடி தண்டனைக்கு ஆளாகியுள்ளார். தற்போது அவர் சிறைக்குச் செல்லாமல், பிணையில் இருந்தார்.

அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ.நா சபை உட்படப் பல்வேறு சர்வதேச அமைப்புகள் ஈரான் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.

சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக மகாபாரத தொடர்

December 13, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சாரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம்பெறும் நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம

மூடப்பட்டுள்ள ஹக்கல தாவரவியல் பூங்காவை விரைவில் திறக்க நடவடிக்கை

December 13, 2025

நாட்டில் வீசிய ‘டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் மூடப்பட்டுள்ள ஹக்கல தாவரவியல் பூங்காவை விரைவாகத் திறப்பதற்குத் தேவையான

மன்னார் மாவட்டத்தில் அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்

December 13, 2025

மன்னார் மாவட்டத்தில் அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில்

mansa

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் காணி ?

December 13, 2025

‘டித்வா’ புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது.

wat

36 பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக அறிவிப்பு

December 13, 2025

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்களும், 46-க்கும் அதிகமான நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான் பாய்ந்து வருவதாக

பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட மருத்துவமனையை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் விசேட ஆய்வு

December 13, 2025

பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட மருத்துவமனையின் தற்போதைய நிலைமையை ஆராய்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ

யாழ் சிறையின் நிவாரண உதவி

December 13, 2025

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. இந்த உதவி பொருட்கள்

நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி

December 13, 2025

டுபாயில் இடம்பெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய நேபாளம் அணிக்கு

2025 ஆம் ஆண்டின் அரச வரி வருமானம் 4000 பில்லியன்

December 13, 2025

2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்குள் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,033 பில்லியன் ரூபாய் என நிதி

சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் விருந்து: 26 பேர் தெல்தெனியவில் கைது

December 13, 2025

சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விருந்து நிகழ்வில் பொலிஸார் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, நான்கு பெண்கள் உட்பட

Parl

18ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது

December 13, 2025

18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவிப்பை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன

Arrest_1

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது

December 13, 2025

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன்,