அமெரிக்காவை எளிதாக வீழ்த்திய இந்திய அணி

பத்தொன்பது வயதுக்கு உள்பட்ட (யு-19) ஆடவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான குரூப் – ஏ பிரிவின் முதல் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வேயின் புலவயோ நகரில் வியாழக்கிழமை (ஜன. 15) நடைபெற்ற ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 107 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி வீரர் ஹெனில் படேல் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார்.

இந்த நிலையில், மழை காரணமாக ஆட்டத்தின் ஓவர்கள் 37 ஓவர்களாக குறைக்கப்பட்டன. இதையடுத்து டக்வெர்த் லீவிஸ் (டிஎல்எஸ்) முறையில் இந்தியா வெற்றி பெற 96 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி 17.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஹெனில் படேல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த 16-ஆவது உலகக் கோப்பை போட்டியில், மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. குரூப் “ஏ’-வில் இந்தியா, வங்கதேசம், நியூஸிலாந்து, அமெரிக்கா உள்ளன. ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள், சூப்பர் 6 கட்டத்துக்கு வரும்.

அதில் அந்த 12 அணிகளும் தலா 6 அணிகளாக “குரூப் 1′, “குரூப் 2′ என பிரிக்கப்படும். அந்த அணிகள் தங்களுக்குள்ளாக மோத, முடிவில் இரு குரூப்களிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இறுதி ஆட்டம் பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.