துறை சார்ந்த வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து Washington உடன் பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி Trump இன் நிர்வாகத்துடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய முடியாவிட்டால், புதிய பழிவாங்கும் வர்த்தக நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவை தாக்குவதற்கு Ottawa விற்கு விடுக்கப்பட்ட அழைப்புகளை பிரதமர் Mark Carney நிராகரிக்கிறார்.
திருப்பி அடிக்க வேண்டிய நேரங்கள் உண்டு, பேச வேண்டிய நேரங்களும் உண்டு, இப்போது பேச வேண்டிய நேரம் இது, என்று வியாழக்கிழமை Toronto வில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் Carney கூறினார்.
இந்நிலையில், கடந்த வாரம் கருத்து வெளியிட்ட Ontario மாகாண முதல்வர் Doug Ford, மாகாண முதல்வர்களுடன் அமர்ந்து திரைக்குப் பின்னால் நடைபெறும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்து தெளிவு படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதனடிப்படையில், வியாழக்கிழமை Ottawa வின் எரிசக்தி, அலுமினியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட பல வரி விதிக்கப்பட்ட துறைகள் குறித்து அமெரிக்காவுடன் ஆழமான மற்றும் தீவிரமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்தப் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து முதல்வர் Doug Ford இற்கு விளக்குவதாகவும் Carney கூறினார்.
வாகனம், வனவியல் மற்றும் உற்பத்தித் துறைகளைப் பாதிக்கும் வரிகள் என்பவற்றுடன் மீளாய்விற்கு உட்படுத்தப்படவுள்ள அமெரிக்கா மற்றும் Mexico உடனான கனடாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பிலும் தானும் Ford உம் வியாழக்கிழமை கலந்துரையாடவுள்ளதாக Carney கூறினார்.