அமெரிக்காவில் வீட்டில் தீ பற்றியதால் இந்திய மாணவி உயிரிழப்பு

அமெரிக்காவில் வீட்டில் ஏற்பட்ட தீயால் பலத்த காயமடைந்த 24 வயது இந்திய மாணவி உயிரிழந்தார்.

தெலுங்கானாவைச் சேர்ந்த 24 வயது சஹஜா ரெட்டி உடுமலா, அமெரிக்காவின் நியூயார்க், அல்பானி நகரில் வசித்து வந்தார். சஹஜா மூன்று ஆண்டுகளுக்கு முன் சைபர் செக்யூரிட்டியில் ( இணைய பாதுகாப்பு) முதுகலைப் பட்டம் பெற அமெரிக்கா சென்றார், சில மாதங்களுக்கு முன்புதான் வேலைக்குச் சேர்ந்தார்.

அவரது தந்தை ஒரு தகவல் தொழில்நுட்ப நிபுணர் மற்றும் அவரது தாய் ஒரு ஆசிரியர். டிசம்பர் 4ம் தேதி வீட்டில் தனது அறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது தீ பற்றியது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: வீட்டில் தீ பரவியது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு பலத்த காயமடைந்த சஹஜாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், துரதிர்ஷ்டவசமாக, காயமடைந்த பெண் உயிரிழந்தார் என்றனர்.

இது குறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய துாதரகம் தனது எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: அல்பானியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த உடுமாலாவின் அகால மறைவால் மிகவும் வருத்தமடைந்துள்ளோம்.

இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கின்றோம். மேலும் உடுமலாவின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம். இவ்வாறு இந்திய துாதரகம் பதிவிட்டுள்ளது.

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7