அமெரிக்காவில் பௌத்த துறவிகளின் ‘அமைதி நடைப்பயணம்’

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து சுமார் 108 நாட்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட புத்த துறவிகளின் 2,300 மைல் (3,700 கி.மீ.) நீள ‘அமைதி நடைபயணம்’ (Walk for Peace), செவ்வாய்க்கிழமை (10) நாட்டின் தலைநகரான வொஷிங்டன் டி.சி.யை சென்றடைந்துள்ளனர்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த் நகரிலுள்ள ஹுவாங் தாவோ விபாசனா மையத்தில் இருந்து 19 தேரர்கள் இந்தப் பயணத்தைத் ஆரம்பித்தனர்.

லூசியானா, அலபாமா, ஜோர்ஜியா, தென் கரோலினா, வட கரோலினா மற்றும் வர்ஜீனியா உள்ளிட்ட 8 மாகாணங்களைக் கடந்து இந்த நடைப்பயணம் வொஷிங்டனை அடைந்துள்ளது.

அரசியல் பிளவுகள் மற்றும் சமூக மோதல்களுக்கு மத்தியில், ‘அமைதி என்பது நமக்குள் இருந்து தொடங்க வேண்டும்’ என்ற செய்தியை இவர்கள் அமெரிக்க மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளனர்.

இந்த நடைபயணத்தில் தேரர்களுடன் இணைந்து ‘அலோகா’ என்றழைக்கபடும் இந்திய தெருநாய் இனத்தைச் சேர்ந்த நாயும் பயணித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

2022-இல் இந்தியாவில் துறவிகள் மேற்கொண்ட நடைபயணத்தின் போது அவர்களைப் பின்தொடர்ந்த இந்த நாயை, தேரர்கள் தத்தெடுத்து அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்தப் பயணத்தின் போது அலோகா காலில் காயமடைந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதிலும், குணமடைந்த பின் மீண்டும் தேரர்களுடன் இணைந்து தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளது.

இந்த நீண்ட பயணத்தில் பெரும் விபத்து ஒன்றும் நேரிட்டது. நவம்பர் மாதம் ஹூஸ்டன் அருகே சென்றபோது, துறவிகளின் வாகனத்தின் மீது ஒரு லொறி மோதியதில் மகா தம் போமசான் (Maha Dam Phommasan) என்ற தேரர் தனது காலை இழந்தார். இருப்பினும், தனது உறுதியைக் கைவிடாத அவர், நேற்று வொஷிங்டனில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மீண்டும் தேரர்களுடன் இணைந்தது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியடையச் செய்தது.

வொஷிங்டன் தேசிய தேவாலயத்தில் நடைபெற்ற மதாந்தர கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்களும், பிற மதத் தலைவர்களும் இவர்களை வரவேற்றுள்ளனர்.

“இது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். அமைதி என்பது வெறும் வார்த்தை அல்ல, அது ஒவ்வொரு அடியிலும் உணரப்பட வேண்டிய ஒன்று,” எனத் தேரர்களின் தலைவர் பிகுக் பன்னாகாரா (Bhikkhu Pannakara) நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை (11) இந்தத் தேரர்கள் கேபிட்டல் ஹில் (Capitol Hill) வழியாக நடந்து சென்று, லிங்கன் நினைவிடத்தில் நடைபெறும் நிறைவு விழாவில் பங்கேற்கவுள்ளனர். பின்னர் இவர்கள் பஸ்ஸில் மீண்டும் டெக்சாஸ் நோக்கிய பயணிக்கவுள்ளனர்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய