அமெரிக்காவில் பனிப்புயல்: 5000க்கு மேற்பட்ட விமானங்கள் இரத்து

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் வீசிய சக்திவாய்ந்த பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் சுமார் 5,700-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது

மேலும் 2000 விமானங்கள் இரத்துசெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நியூயோர்க், மாசசூசெட்ஸ் மற்றும் ரோட் தீவு உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத அளவில் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

குறிப்பாக, ரோட் தீவு (Rhode Island) மற்றும் மாசசூசெட்ஸ் மாநிலத்தின் சில பகுதிகளில் சுமார் 37 அங்குலம் (94 செ.மீ) வரை பனி கொட்டியுள்ளது. இது ரோட் தீவு மாநில வரலாற்றிலேயே பதிவான மிக மோசமான பனிப்புயலாகக் கருதப்படுகிறது.

தலைநகர் பிராவிடன்ஸில் 36 அங்குல பனி பதிவாகி, 1978-ஆம் ஆண்டு நிலவிய சாதனையை முறியடித்துள்ளது. நியூயோர்க்கின் சென்ட்ரல் பூங்காவிலும் 19 அங்குலத்திற்கும் அதிகமான பனிப்பொழிவு பதிவாகியுள்ளதால், போக்குவரத்து மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பனிப்புயல் காரணமாக நியூஜெர்சி மற்றும் மாசசூசெட்ஸ் மாநிலங்களில் சுமார் 6 இலட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றன.

“ஒயிட்-அவுட்” (White-out) எனப்படும் கண்மறைக்கும் பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் Visibility எனப்படும் பார்வைத்திறன் வெகுவாகக் குறைந்துள்ளதால், மாசசூசெட்ஸ் ஆளுநர் மௌரா ஹீலி அவசியமற்ற பயணங்களுக்குத் தடை விதித்துள்ளார்.

கனெக்டிகட் மற்றும் நியூஜெர்சி மாநிலங்களிலும் இதே போன்ற பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. வீதிகளில் மரங்கள் விழுந்து கிடக்கக்கூடும் என்பதால், மீட்புப் பணிகள் சவாலாக இருக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, அமெரிக்கா முழுவதும் சுமார் 5,700-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

நியூயோர்க்கின் லாகார்டியா (LaGuardia) மற்றும் ஜே.எஃப்.கே (JFK) விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய 90 சதவீதத்திற்கும் அதிகமான விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

போஸ்டன் மற்றும் பிலடெல்பியா விமான நிலையங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. செவ்வாய்க்கிழமை காலை வரை பனிப்பொழிவு தொடரும் எனத் தேசிய வானிலை ஆய்வு மையம் (NWS) தெரிவித்துள்ளதால், மேலும் 2,000 விமானங்கள் இரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

வடக்கு கரோலினா முதல் மெய்ன் வரை நீடிக்கும் இந்தப் பனிப்புயல் எச்சரிக்கை, தற்போது கனடாவின் கிழக்குப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.