யாழில் இடி மின்னல் தாக்கத்தால் தேவாயலம் ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட J/187 சங்குவேலி கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் இந்த இடி மின்னல் தாக்கம் சனிக்கிழமை (06) இரவு இடம்பெற்றது.
இந்த இடி மின்னல் தாக்கத்தால் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.