ஹப்புதலை பிட்ராத்மலை தோட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 115 குடும்பங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் பார்வையிட்டார்.
தோட்ட மக்களை சந்தித்த நிலையில் அனர்த்தம் ஏற்பட்ட தினத்திலிருந்து தாங்கள் முகாம்களில் தங்க வைத்திருப்பதாகவும், தங்களுக்கான மாற்று இடங்கள் எதுவும் இதுவரை வழங்கப்படாததாகவும், தாங்கள் ஏற்கனவே தங்கியிருந்த இடங்கள் பாதுகாப்பானதா என இன்னும் NBRO உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் செந்தில் தொண்டமானிடம் தோட்ட மக்கள் முறைப்பாடு செய்தனர்.
இந்நிலையில் தோட்ட முகாமையாளரை உடனடியாக தொடர்புக் கொண்ட செந்தில் தொண்டமான், மக்கள் தங்கியிருக்கும் முகாமிற்கு முகாமையாளரை உடனடியாக வருமாறும் இல்லையெனில் தான் மக்களுடன் உடனடியாக முகாமையாளரின் பங்களாவிற்கு வருவதாகவும் வழமை போல் தனது பாணியில் தெரிவித்தார்.
அதனையடுத்து, 5 நிமிடத்தில் மக்கள் தங்கியிருக்கும் முகாமிற்கு முகாமையாளர் சமூகமளித்தார். மக்களுக்கு மாற்று இடங்களை அடையாளம் கண்டு NBRO அனுமதியுடன் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு முகாமையாருக்கு செந்தில் தொண்டமான் உத்தரவிட்டார். முகாமையாளர் தேவையான நடவடிக்கையை உடனடியாக முன்னெடுப்பதாக மக்கள் முன்னிலையில் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்தார்.
By C.G.Prashanthan