அநுர ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து சதி செய்கிறார்கள் இது வெறும் பகற்கனவே!

“அநுர ஆட்சியை வீழ்த்தலாம் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து சதி செய்கிறார்கள். இது வெறும் பகற்கனவே. மக்கள் எம் பக்கமே.” – என்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எந்திரி ஜி.அருணன் ஏற்பாட்டில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கூட்டம் அபூபக்கர் ஆதம்பாவா எம்.பி. தலைமையில் இடம்பெற்றது.

“டித்வா பேரிடரில் பாதிக்கப்பட்ட எமது இலங்கைக்கு 49 நாடுகள் உதவி வருகின்றன. அதற்குக் காரணம் ஜனாதிபதி அநுரகுமார மற்றும் ஆட்சி மீதான பூரண நம்பிக்கை அம்பாறை மாவட்ட கரையோரத்தில் 125 கிலோமீற்றர் தூரம் கடலரிப்பு இடம்பெறுகின்றது.

அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்கான நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இவ்வாரத்தில் நடைபெறவிருக்கின்றது. கடந்தாண்டு காரைதீவு பிரதேசத்துக்குச் சுமார் 10 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. காரைதீவு மைதானம் மற்றும் அரங்கு திருத்தம் செய்யப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” – என்றார்.

இந்தநிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாடாளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹிர், காரைதீவு பிரதேசசபை பதில் தவிசாளர் ஏஎல்எம்.இஸ்மாயில், உதவி பிரதேச செயலாளர் எஸ்.பிரணவரூபன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ரி.இராஜகுலேந்திரன் மற்றும் கணக்காளர் ஹஸ்மியா மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் முப்படையினர், திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள், பிரதேச சபை செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இங்கு கடந்த காலங்களில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திகள், கடந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான தீர்மானங்கள் குறித்து அதிகாரிகளிடம் ஆராயப்பட்டதுடன் காரைதீவு பிரதேச செயலக பிரிவிலுள்ள கல்வி, சுகாதாரம், குடிதண்ணீர் பிரச்சினை, வீதி புனரமைப்பு, மைதானம் போன்ற பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் விரைவில் இதற்கான தீர்வுகள் மக்களுக்கு சென்றடைய உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கப்பட்டது.

அத்துடன் 2026 ஆம் ஆண்டுக்கான திட்ட வரைவுகளும் முன்மொழியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ca

அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கத் தயாராகும் ஈரான்

March 14, 2026

ஈரானின் பிரதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையமாக கருதப்படும் கார்க் (Kharg) தீவு மீது அமெரிக்கா குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

goe

இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி முக்கிய அறிவிப்பு

March 14, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என அந்த

ir

கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின் 200 இலக்குகளை 24 மணி நேரத்தில் தாக்கிய இஸ்ரேல்

March 14, 2026

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200 இற்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய விமானப்

je

ஜெய்சங்கர் ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சியுடன் மீண்டும் பேச்சு

March 14, 2026

ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியுடன் மீண்டும் தொலைபேசியில் பேசியுள்ளேன் எனவும் இரு தரப்பு உறவு குறித்து விவாதிக்கப்பட்டது

uni

கமேனி பற்றிய தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பணப்பரிசு – அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம்

March 14, 2026

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மற்றும் அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) உயர்மட்டத் தலைவர்கள்

4556

அநுர ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து சதி செய்கிறார்கள் இது வெறும் பகற்கனவே!

March 14, 2026

“அநுர ஆட்சியை வீழ்த்தலாம் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து சதி செய்கிறார்கள். இது வெறும் பகற்கனவே. மக்கள் எம் பக்கமே.” –

fue

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் புதிய செய்தி

March 14, 2026

உலகில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக நாட்டில் அதிகரித்துள்ள எரிபொருள் விலைகளை அரசாங்கம் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும்

45

கனடா – பிரான்ஸ்; வர்த்தக கொண்டாட்டங்கள்

March 14, 2026

ஆண்டுதோறும் நடைபெறும் கனடா – பிரான்ஸ்; வர்த்தக கொண்டாட்டங்கள் மற்றும் வணிக விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டமை பெருமையளிப்பதாக

xa

மொன்ரியல் நகர கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்; வன்கூவரில் ஒரு பெண்ணைக் குத்திக்கொன்றவர்?

March 14, 2026

வன்கூவரில் இரண்டு குழந்தைகளின் தாயை குத்திக்கொன்ற 35 வயதான மொன்ரியல் நபர், பிளாட்டோ மொன்ரோயல் பகுதியில் உள்ள ஒரு dépanneur

chaco

மின்சார உற்பத்திக்கு அச்சுறுத்தல்?

March 14, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம், இலங்கையின் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி விநியோகத்திலும் பெரும் பாதிப்பை

d

போதைப்பொருள், ஆயுதங்களுடன் கைதானவர்களின் விபரங்கள் வெளியீடு

March 14, 2026

போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்த 10 சந்தேக நபர்களுக்கும் தடுப்புக்காவல் உத்தரவைப் பெறவுள்ளதாக

heat

வெப்பமான வானிலை; பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

March 14, 2026

தற்போதைய வெப்பமான வானிலைக்கு மத்தியில் நடத்தப்படும் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளின் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என கொழும்பு,