அதிநவீன கடலோர காவல் படை ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

இந்​திய கடலோர காவல் படைக்​காக உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட அதிநவீன ரோந்​துக் கப்​பல், காரைக்​காலில் நேற்று நடை​பெற்ற விழா​வில் நாட்​டுக்கு அர்ப்​பணிக்​கப்​பட்​டது.

இந்​திய கடலோர காவல் படை​யின் காரைக்​கால் மையம் நிரவி பகு​தி​யில் செயல்​பட்டு வரு​கிறது. காரைக்​கால் மாவட்​டம் வாஞ்​சூரில் உள்ள அதானி கப்​பல் துறை​முகத்தில் உள்ள தளத்​தில் இருந்து கடலோர காவல் படைக்​குச் சொந்​த​மான ரோந்​துக் கப்​பல்​கள், படகு​கள் இயக்​கப்​படு​கின்​றன.

இந்​நிலை​யில், இந்த மையத்​தின் செயல்​பாடு​களை மேம்​படுத்​தும் வகை​யில், கோவா கப்​பல் கட்​டும் தளத்​தில் புதி​தாக தயாரிக்​கப்​பட்ட ‘அக் ஷர்’ என்று பெயரிடப்​பட்ட அதிநவீன ரோந்​துக் கப்​பலை நாட்​டுக்கு அர்ப்​பணிக்​கும் விழா காரைக்​கால் துறை​முக வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது.

மத்​திய பாது​காப்​புத் துறை கூடு​தல் செயலர் தீப்தி மொஹில் சாவ்லா சிறப்பு அழைப்​பாள​ராக கலந்​து​கொண்​டு, கப்​பலை இயக்​கி​
வைத்​துப் பேசி​ய​தாவது: இந்​திய கடலோர காவல் படை​யின் மேம்​பாட்​டுக்கு அக் ஷர் ரோந்​துக் கப்​பல் பெரிதும் உதவும். 60 சதவீதம் உள்​நாட்​டுப் பொருட்​கள், தளவாடங்​களை பயன்​படுத்தி இது தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. நாட்​டில் 11 ஆயிரம் கி.மீ. கடலோர பாது​காப்​பில், கடலோர காவல் படை​யின் பங்​களிப்பு அளப்​பரியது. குறிப்​பாக, மீனவர்​களுக்கு பாது​காப்பு அளித்​தல், கடல்​வழி கடத்​தலை தடுத்​தல், ஊடுரு​வலை தடுத்​தல், கடல் பகுதி சூழல் பாது​காப்​பு, மீட்பு நடவடிக்​கைகள் உள்​ளிட்​ட​வற்​றில் கடலோர காவல் படை​யின் செயல்​பாடு​கள் பாராட்​டுக்​குரிய​வை.
இவ்​வாறு அவர் பேசி​னார்.

விழா​வில், கடலோர காவல் படை கூடு​தல் இயக்​குநர் ஜெனரல் கமாண்​டர் டோனி மைக்​கேல், காரைக்​கால் மைய கமாண்​டன்ட் சவுமய் சந்​தோலா, புதிய ரோந்​துக் கப்​பல் கமாண்​டன்ட் சுபேந்து சக்​கர​போர்​தி, காரைக்​கால் ஆட்​சி​யர் ரவி பிர​காஷ், மாவட்ட எஸ்​.எஸ்​.பி. லட்​சுமி சவுஜன்​யா, நாகை எஸ்​.பி. செல்​வகு​மார் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

கப்​பலில் உள்ள சிறப்​பம்​சங்​கள்: இந்த ரோந்​துக் கப்​பல் 320 டன் எடை, 51 மீட்​டர் நீளம் கொண்​டது. மணிக்கு 27 நாட்​டிக்​கல் மைல் வேகத்​தில் இயங்​கும். 30 எம்​எம் சிஆர்​என்​-91 துப்​பாக்​கி​கள், ரிமோட் மூலம் இயக்​கப்​படக்​கூடிய இயந்​திர துப்​பாக்​கி​கள், தானி​யங்கி மின் சாதனங்​கள் உள்​ளிட்ட பல்​வேறு நவீன அம்​சங்​கள் இடம்​பெற்​றுள்​ளன.

hindutamil

ind

இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணிப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக

gun

வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

March 5, 2026

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட