அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை; உதவத் தயார் மன்னர் சார்ள்ஸ் அறிவிப்பு!

ஜெப்ரி எப்ஸ்டீன் பாலியல் ஊழல் வழக்கில் தனது சகோதரர் அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் மீதான புதிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் பட்சத்தில், பொலிஸாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக மன்னர் சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

அமெரிக்க நீதித்துறை அண்மையில் வெளியிட்ட 30 இலட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் ஆவணங்களில் அண்ட்ரூ குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன:

2010-ஆம் ஆண்டு அண்ட்ரூ இங்கிலாந்தின் வர்த்தகத் தூதுவராக இருந்தபோது சிங்கப்பூர், வியட்நாம், ஹொங்கொங் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணங்களின் இரகசிய அறிக்கைகளை ஜெப்ரி எப்ஸ்டீனுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியதாகத் தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்வதற்கான ‘மிக இரகசிய’ விவரங்களையும் அவர் எப்ஸ்டீனுடன் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது உத்தியோகபூர்வ இரகசியச் சட்டத்தை மீறும் செயல் என ‘ரிபப்ளிக்’ என்ற அமைப்பு முறைப்பாடு அளித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

“மவுண்ட்பேட்டன்-வின்சரின் நடத்தை குறித்து தொடர்ந்து வெளிவரும் முறைப்பாடுகள் குறித்து மன்னர் மிகுந்த கவலை அடைந்துள்ளாரர். பொலிஸ் எங்களை அணுகினால், அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.”

இதன் மூலம், தனது சகோதரரைக் காப்பாற்ற முயலாமல் சட்டத்திற்கு மதிப்பளிக்க மன்னர் தீர்மானித்திருப்பது தெளிவாகியுள்ளது.

அண்ட்ரூ ஏற்கனவே தனது ‘இளவரசர்’ மற்றும் ‘டியூக்’ பட்டங்களை 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இழந்தார். தற்போது அவர் தனது வின்சர் கோட்டை இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, சாண்ட்ரிங்ஹாம் (Sandringham) எஸ்டேட்டில் தங்கியுள்ளார்.

மன்னர் சார்ள்ஸ் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அங்கிருந்த ஒருவர் “அண்ட்ரூ பற்றி உங்களுக்கு எவ்வளவு காலமாகத் தெரியும்?” எனக் கத்தியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோரும் எப்ஸ்டீன் விவகாரத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் தங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

அண்ட்ரூ இந்த முறைப்பாடுகள் அனைத்தையும் திட்டவட்டமாக மறுத்து வருகிறார். இருப்பினும், எப்ஸ்டீன் ஆவணங்களில் பெண்ணுடன் இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளது பிரித்தானிய அரச குடும்பத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய