பிரதீப் ரங்கநாதன் LIK படத்திற்கு பிறகு நடிக்கப்போகும் படம் குறித்து பல தகவல்கள் இணையத்தில் வெளியாகிக்கொண்டு வருகின்றன. அந்த தகவலில் எந்தளவிற்கு உண்மை என்பது குறித்து தற்போது இந்த தொகுப்பில் பார்க்கலாம்
முக்கிய அம்சங்கள்:
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடைசியாக வெளியான டியூட் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பல சர்ச்சைகளை கடந்து இளைஞர்களின் பேராதரவுடன் இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து அவரின் அடுத்த படமான LIK பிப்ரவரி மாதம் ரிலீஸாகவுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் இப்படம் டிசம்பர் மாதமே வெளியாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போய்விட்டது.
மேலும் அப்படத்தில் ஸ்ரீலீலாமற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நாயகிகளாக நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவின. இதை கேட்ட பிரதீப் ரங்கநாதன் ரசிகர்கள் குஷியானார்கள். ஒருபக்கம் சென்சேஷனல் ஹீரோவான பிரதீப் ரங்கநாதன் மறுபக்கம் சென்சேஷனல் நாயகிகளாக ஸ்ரீலீலா மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோரது காம்போவில் இப்படம் தயாராக இருப்பதால் ரசிகர்கள் குஷியானார்கள். ஆனால் இத்தகவல் வதந்தி என தற்போது தெரிய வந்துள்ளது.