​அக்வா பிளானட் ஸ்ரீ லங்கா 2025 சர்வதேசக் கண்காட்சி

எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ‘அக்வா பிளானட் ஸ்ரீ லங்கா 2025 சர்வதேசக் கண்காட்சி’ குறித்து ஊடகங்களை அறிவூட்டும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பானது இன்றைய தினம் கொழும்பில் உள்ள தாமரைக் கோபுர வரவேற்புத் தளத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பிற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் தலைமை தாங்கினார்.

​இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சந்திரசேகரன், இந்தக் கண்காட்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

​”2025 ஆம் ஆண்டு நவம்பர் 21 முதல் 23 ஆம் திகதி வரை கொழும்பு தாமரைக் கோபுர வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியானது, அலங்கார மீன்களின் அழகு, சுவையான கடல் உணவுகள், நவீன தொழில்நுட்பம், நிலையான நடைமுறைகள் மற்றும் நீரியல் கலாச்சார அனுபவங்கள் ஆகியவற்றை ஒரே கூரையின் கீழ் கொண்டுவரும்.”

​அவர் மேலும் தெரிவிக்கையில், 150 க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச கண்காட்சி அரங்குகளுடன் இந்தக் கண்காட்சி இடம்பெறவுள்ளது. இது அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு புதுமையான தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

​இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களுடன் பின்வரும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்:
​கலாநிதி கோலித்த கமல் ஜினதாச – அமைச்சின் செயலாளர்

சுசந்த கஹவத்த – பணிப்பாளர் நாயகம், மீன்பிடித்துறை மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம்

கித்சிறி தர்மப்பிரிய – தலைவர், தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபை

​இந்த மாபெரும் சர்வதேசக் கண்காட்சி நாட்டின் நீரியல் துறைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும், உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் என்றும் இந்த அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

By C.G.Prashanthan

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

னேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த