போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் ‘அகண்டா 2’. கடந்த வாரமே ரிலீசாகவிருந்த இப்படம் சில காரணங்களால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால் பாலைய்யா ரசிகர்கள் கடும் அப்செட் அடைந்தனர். இதனையடுத்து ‘அகண்டா 2’ புதிய ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’ இரண்டாம் பாகம் ரிலீசுக்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பில் இருந்தனர். ஆனால் திடீரென இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. கடைசி நேரத்தில் படத்துடைய வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது ரசிகர்கள் இடையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘அகண்டா 2’ ரிலீஸ் பற்றி லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
‘அகண்டா’ படத்தின் பெரிய வெற்றிக்கு பின் இரண்டாவது பாகம் உருவாக்கப்பட்டது. போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகி பான் இந்திய அளவில் ரிலீசாக இருந்த நிலையில், திடீரென வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய முந்தைய படத்துக்கு வாங்கிய கடனுக்காக நீதிமன்றம் ‘அகண்டா 2’ ரிலீசுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் திட்டமிட்டப்படி கடந்த 5 ஆம் தேதி படம் வெளியாகவில்லை.
இதனையடுத்து மறுநாளே ‘அகண்டா 2’ படத்தினை ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது வரை இப்படத்தின் வெளியீடு தொடர்பாக எந்த வித அறிவிப்பும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் ‘அகண்டா 2’ ரிலீஸ் குறித்து ஹேப்பி நியூஸ் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, இந்த வாரம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி எப்படியாவது படத்தினை வெளியிட வேண்டுமென படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.