வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பெய்த கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பயிர்கள் முற்றாகச் சேதமடைந்து, தங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், தற்போது அறுவடைக் காலம் என்பதால், இந்த அழிவின் காரணமாகத் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். விவசாயத்தைச் சார்ந்திருக்கும் பல்வேறு துணைத் தொழில்களும் இதனால் நலிவடைந்து வருகின்றன.

நுவரெலியா, கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள மரக்கறித் தோட்டங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தமையால் மலைநாட்டு மரக்கறிப் பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கரட், லீக்ஸ், கோவா மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் பெருமளவில் அழிவடைந்துள்ளன.

தொடர் மழையினால் தாழ்வான விவசாய நிலங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால், அறுவடைக்குத் தயாராக இருந்த மரக்கறிகள் நீரில் மூழ்கி அழுகிவிட்டன அல்லது மண்ணில் புதைந்து போயுள்ளன. அத்துடன், வெள்ள நீர் காரணமாகப் பயிர்களில் பூச்சி மற்றும் நோய்த் தாக்கங்கள் அதிகரித்து, மரக்கறிகளைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது விளைச்சலைக் குறைத்து விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளப்பெருக்கின் போது ஆற்று மணலும் சேறும் கலந்த மழைநீர் விவசாய நிலங்களில் பாய்ந்துள்ளது. வெள்ளம் வடிந்த பின்னரும், மணலும் சேறும் நிலத்தில் அப்படியே தங்கிவிடுவதால், விவசாய நிலங்களின் தன்மை மாறி, அவை பயிர்செய்ய முடியாத தரிசு நிலங்களாகக் காட்சியளிக்கின்றன. அத்துடன் வேகமாகப் பாய்ந்த வெள்ள நீரால் மண் அரிப்பு ஏற்பட்டு, மண் வளமும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கந்தப்பளை போன்ற பகுதிகளில் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மழைநீரை எடுத்துச் செல்லும் கால்வாய்கள் முறையாகப் புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்படாமை, நீர்ப்பரப்புப் பகுதிகளில் நடைபெறும் தொடர் ஆக்கிரமிப்புகள் மற்றும் ஆறுகளைச் சரிவர ஆழப்படுத்தாமை ஆகியவையே இதற்குக் காரணம் என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இவற்றின் காரணமாக நீர்நிலைகளின் கொள்ளளவு குறைந்து, ஒரு பெருமழைக்குக் கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு விவசாய நிலங்கள் அழிவடைவதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் உரிய நஷ்டஈடுகளையும் உதவிகளையும் வழங்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாகும்.

anu

மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதில் ஒருங்கிணைந்த பொறிமுறை தேவை – ஜனாதிபதி

December 6, 2025

ஒரு அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதில், சாதாரண அரசு இயந்திரங்களுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை தேவை என்று

nat

2,000 மலைகளில் அறிவியல் ஆய்வு

December 6, 2025

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், மத்திய சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள கிட்டத்தட்ட 2,000 மலைகளில் விரிவான அறிவியல்

jai

யாழ்ப்பாணத்தில் சைக்கிள் திருட்டில் நால்வர் கைது

December 6, 2025

யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

minnal

வானிலையில் ஏற்படும் மாற்றம்

December 6, 2025

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (06) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பின் படி, வடக்கு,

tn

பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புகிறது தமிழக அரசு!

December 6, 2025

‘டித்வா’ புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப்

ve

வெலிமடை- நுவரெலியா வீதி போக்குவரத்திற்காக மீண்டும் திறப்பு

December 6, 2025

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாக மூடப்பட்டிருந்த வெலிமடை- நுவரெலியா வீதி இன்று சனிக்கிழமை (06) மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளதாக

mooth

மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும் நடவடிக்கை

December 6, 2025

மூதூர் – நீலாபொல பகுதியில் இருந்து மூதூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை கொண்டு செல்கின்ற பாரிய குழாயானது அண்மையில்

Government

சம்பளமற்ற விடுமுறைகள் இடைநிறுத்தம்

December 6, 2025

அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு பொது நிர்வாக,

ditva_1

600ஆக அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

December 6, 2025

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் சூறாவளி புயல் டிட்வா மற்றும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்துள்ளதாக

de

பிள்ளைகளுடன் உயிரை மாய்க்க முயன்ற பெண்ணின் மகனின் சடலம் மீட்பு; மகளை காணவில்லை?

December 6, 2025

அனுராதபுரத்தில் தாய் ஒருவர் 2 பிள்ளைகளுடன் உயிரை மாய்க்க முயன்ற நிலையில் அவரது மகனின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. மொரட்டுவையில்

wat

36 பிரதான நீர்த்தேக்கங்கள் உட்பட 71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம்!

December 6, 2025

தற்போது 36 பிரதான நீர்த்தேக்கங்கள் உட்பட 71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்திற்குச் சொந்தமான

deat

வீடு ஒன்றினுள் விச வாயு : குடும்ப பெண் உயிரிழப்பு!

December 6, 2025

வீடு ஒன்றினுள் இயங்கிய நிலையில் ஜெனரேட்டரில் இருந்து வெளியாகிய நச்சுவாயுவை சுவாசித்த நிலையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் குடும்பப் பெண்ணின் சடலம்