வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை பிரபாகரன் மீண்டும் அழைத்தார் – செல்வின்!

வடக்கில் இருந்து வெளியேற்றிய முஸ்லிம் மக்களை மீண்டும் வடக்கில் குடியேற வருமாறு பிரபாகரன் அழைப்பு விடுத்ததாக செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

வடக்கில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 35 வருட நிறைவை நினைவுகூரும் முகமாக, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில், யாழ். தந்தை செல்வா கலையரங்கத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கையொப்பமிட்ட ஒரே ஒரு ஆவணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரான புரிந்துணர்வு ஒப்பந்த ஆவணம் மட்டும்தான்.

சமாதான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில்கூட அன்ரன் பாலசிங்கம் கையொப்பமிட்டிருப்பார், தமிழ்ச்செல்வன் கையொப்பமிட்டிருப்பார், புலித்தேவன் கையொப்பமிட்டிருப்பார், அல்லது திட்டமிடல் பணிப்பகத்தின் பணிப்பாளர் கையொப்பமிட்டிருப்பார். ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரன் அந்த ஒருடத்திலும் கையொப்பமிடவில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் “பிரபாகரன், இடம்பெயர்ந்த முஸ்லீம்கள் அனைவரையும் மீண்டும் குடியேறுவதற்கு வருமாறு அழைக்கின்றார்” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரவூப் ஹக்கீமுடன் புலிகள் கதைத்த நாட்கள் வலிமையுடனும் அங்கீகரிப்புடனும் இருந்த நாட்கள். தோற்றுப் போய் அழிவடைய போகின்றோம் எந்த நிலையில் இருந்து அவர்கள் கதைக்கவில்லை. சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மிகவும் பலமாக இருந்த நாட்களிலேயே கதைத்தார்கள்.

அப்போது யாழ்ப்பாண மாவட்டம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத யாழ்ப்பாணத்தில் குடியேறுங்கள் என்று சொல்வதற்கு புலிகளால் முடியாது. அந்தச் சூழலில் தங்களால், மீள குடியேறவுள்ள முஸ்லீம் மக்களுக்கு உத்தரவாதம் தர முடியாது என்பதே புலிகளின் சாராம்சமாக இருந்தது.

முஸ்லிம் மக்கள் மதரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவுப், ஏனைய விடயங்கள் ரீதியாகவும் தனித்துவமானவர்கள். அவர்களது உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விடயம் அந்த ஒப்பந்த ஆவணத்தில் தெளிவாக கூறப்படுகிறது.

யார் யாரிடம் மன்னிப்பு கேட்பது? குற்றம் செய்தவர் மன்னிப்பு கேட்பதா? அல்லது குற்றம் செய்தவர் சார்பில் மூன்றாம் தரப்பினர் ஒருவர் மன்னிப்பு கேட்பதா? அல்லது அந்த குற்றத்தை பார்த்த ஒருவர் மன்னிப்பு கேட்பதா? மன்னிப்பு என்பது தவறு செய்தவர் தான் உணர்ந்து செய்வதுதான் மன்னிப்பு என்றார்.

sev

கைது செய்யப்பட்டுள்ள செவ்வந்தி தொடர்பில் முக்கிய தகவல்

November 18, 2025

கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த

air

விமான நிலையத்தில் பயணிகளால் கைவிடப்பட்ட பொதிகளில் சிக்கிய மர்மம்

November 18, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளால் விட்டுச் செல்லப்பட்ட பொதிகளில் இருந்து போதை பொருள் தொகை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. சுங்க அதிகாரிகளால்

ai

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று ஆண்களிடம் அதிகரிப்பு

November 18, 2025

தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமீப தரவுகளின் படி, இலங்கையில் ஆண்களை மட்டுமே மையமாகக் கொண்ட எச்.ஐ.வி தொற்றுகள்

po

அஞ்சலை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுப்பு

November 18, 2025

இலங்கை அஞ்சல் வாடிக்கையாளர்களின் வெளிநாட்டு நாணயம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. சர்வதேச அமைப்பொன்று இலங்கை தபால்

sa

நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள்

November 18, 2025

வங்கதேசத்தில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்ட தலைவர்கள் பட்டியலில், முன்னாள் பிரதமர் ஹேக் ஹசீனாவின் பெயரும்

tru

ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் எந்த ஒரு நாடும் கடுமையான பொருளாதார தடைகளை எதிர்கொள்ளும்!

November 18, 2025

ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் எந்த ஒரு நாடும் மிகக் கடுமையான பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என, அமெரிக்க அதிபர்

el

தன் வர்த்தக நடவடிக்கைகளுக்காக இந்தியா, ஈரானை நம்பியுள்ளது ஆப்கான்!

November 18, 2025

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான உறவு தற்போது மோசமான கட்டத்தில் உள்ளது. எல்லைப் பகுதிகள் மூடப்பட்டதால், தன் வர்த்தக நடவடிக்கைகளுக்காக,

kee

FACETS Sri Lanka-உத்தியோகபூர்வ நிலைச்சொத்து அனுசரணையாளராக ஜோன் கீல்ஸ் !

November 18, 2025

கொழும்பு, இலங்கை – 18 நவம்பர் 2025 இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நாட்டில் இடம்பெறும் முதன்மையான

ka

இந்தியா – பிரான்ஸ் இடையே ‘கருடா 25’ வான் பாதுகாப்பு

November 18, 2025

இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் விமானப்படைகள் இணைந்து மேற்கொள்ளும் ‘கருடா’ என்ற வான் பாதுகாப்பு பயிற்சி துவங்கியது. இந்தியா மற்றும்

tee

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி அழைப்பு

November 18, 2025

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நவம்பர் 30ல் கார்த்திகை தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. மதுரை, திருப்பரங்குன்றம் மலை

in

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்…

November 18, 2025

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்து உள்ளார்.

en

ஆந்திரப் பிரதேசத்தில் நக்சல் அமைப்பின் தலைவர் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை

November 18, 2025

ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சல் அமைப்பின் தலைவர் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.