நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாக மூடப்பட்டிருந்த வெலிமடை- நுவரெலியா வீதி இன்று சனிக்கிழமை (06) மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
வெலிமடை கெப்பட்டிபொல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவை தொடர்ந்து கடந்த மாதம் சனிக்கிழமை (29) முதல் வீதி மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் வெலிமடை- நுவரெலியா வீதி திறக்கப்பட்டதன் மூலம் போக்குவரத்து மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.