வெங்கட் பிரபு படத்தில் சிவகார்த்திகேயன்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘கோட்’ படத்தில் விஜய்யுடன் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். இதனையடுத்து அவருடைய டைரக்ஷனில் புதிய படம் ஒன்றில் எஸ்கே நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் எஸ்கே, வெங்கட் பிரபு காம்போவில் உருவாகும் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கியுள்ளது.

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது. இதனிடையில் தன்னுடைய அடுத்த படத்துக்கான பணிகளை துவங்கியுள்ளார் எஸ்கே. வெங்கட் பிரபு டைரக்ஷனில் அவருடைய அடுத்தப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் காம்போவில் உருவாகும் படம் பற்றி புதிய புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்து வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்துக்காக அவருடன் இணைந்து அமெரிக்காவிற்கு சென்றார் சிவகார்த்திகேயன். லோலா வி.எஃப்.எக்ஸ் நிறுவனத்துக்கு அவர்கள் இருவரும் சென்றார்கள். இங்குதான் விஜய்யின் ‘கோட்’ படத்துக்காகவும் வெங்கட் பிரபு சென்றார். இங்கு உடல் மற்றும் முகம் முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்டும். ‘கோட்’ படத்தில் இடம்பெற்ற விஜய்யின் இளமையான தோற்றத்துகாக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

இதனையடுத்து தற்போது எஸ்கே படத்தையும் இந்த முறையில் உருவாக்க இருக்கிறார் வெங்கட் பிரபு. இந்நிலையில் சிவகார்த்திகேயன் கிளீன் ஷேவ், மீசை இல்லாத லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு படத்தில் இந்த தோற்றத்தில் தான் எஸ்கே நடிக்கவிருக்கிறாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவருடைய இந்த லேட்டஸ்ட் லுக் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

பராசக்தி படத்துக்கு பின்பாக எஸ்கேவின் லைன்அப்பில் சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இருந்தனர். இவர்கள் இருவருமே எஸ்கேவின் கால்ஷீட்டுக்காக நீண்ட காலமாக காத்திருப்பில் உள்ளனர். இந்நிலையில் ‘டான்’ இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் படம் தள்ளிப்போவதால், அவர் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கேற்றவாறு இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கியுள்ளது. விஜய்யின் ‘கோட்’ கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தனது அடுத்த படத்துக்காக எஸ்கேவுடன் கூட்டணி அமைத்துள்ளார் வெங்கட் பிரபு. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சயின்ஸ் பிக்சன் கலந்த டைம் டிராவல் படமாக ‘எஸ்கே 26’ உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளார் வெங்கட் பிரபு.

Mujibar Rahuman

நாட்டில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பற்றதாக செயல்பட வேண்டும்

March 18, 2026

லஞ்ச ஊழல் ஆணைக்குழு அனைவரையும் ஒரேமாதிரி செயற்படுத்த வேண்டும். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு ஒருமாதிரியும் ஏனையவர்களுக்கு வேறு மாதிரியும்

rail

புகையிரத சேவைகளை உடனடியாக வலுப்படுத்துமாறு கோரிக்கை

March 18, 2026

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியினால் இலங்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, பொதுப் போக்குவரத்து சேவைகளையும், குறிப்பாக புகையிரத சேவையையும்

bima

மத்திய கிழக்கின் மோதலால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாக வேண்டும் என்று எதிர்க்கட்சி விரும்புகின்றது; ஆனால் அது ஒருபோதும் நடக்காது

March 18, 2026

ராஜபக்ஷர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதால் அன்று கியூ.ஆர் முறைமை அமுல்படுத்தப்பட்டது.இரண்டு தலைவர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் இன்று பொருளாதார முன்னெற்றத்துக்கு

Gotta

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவிடம் இரு மணிநேரம் விசாரணை!

March 18, 2026

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடித் தொடர்பில், இலஞ்ச

man

விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்காக விசேட பொறிமுறை

March 17, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், மன்னார்

e

பாடசாலைகளின் அன்றாட நிர்வாகம்; கல்வி அமைச்சின் அறிவிப்பு

March 17, 2026

ரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், பாடசாலைகளின் அன்றாட நிர்வாகம் மற்றும் கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக கல்வி,

hu

ஹொர்முஸ் நீரிணையூடாக பாதுகாப்புக்காக கப்பல்களைக் கோரும் ஈரான்

March 17, 2026

வளைகுடாவிலிருந்து ஹொர்முஸ் நீரிணையூடாக இந்தியக் கொடியுடைய அல்லது இந்தியா நோக்கி பயணிக்கும் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்துக்கான பேச்சுக்களின் அங்கமாக பெப்ரவரியில்

20

இலங்கை கிரிக்கெட் அணி உலக கிண்ணத்தை வென்று 30 ஆண்டுகள்

March 17, 2026

இலங்கை கிரிக்கெட் அணி 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்று 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற

Saji

எரிபொருள் இறக்குமதிக்கு அபாய மதிப்பீடு உள்ளதா? – எதிர்க்கட்சித் தலைவர்

March 17, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் நிலைமை காரணமாக இலங்கைக்கு மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதியில் ஏற்படக்கூடிய

in

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதான பணப் பரிவர்த்தனை வசதி

March 17, 2026

இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பணம் செலுத்துவதற்கான வசதியை மேம்படுத்தும் நோக்கில், NPCI International Payments Limited

gg

78 கிலோ போதைப்பொருள் கிளிநொச்சி கடற்பரப்பில் கைப்பற்றல்

March 17, 2026

கிளிநொச்சி டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் மிதந்த சுமார் எழுபத்தெட்டு (78) கிலோகிராம் மற்றும் முன்னூறு (300) கிராம் வெளிநாட்டு

Gch

பாதிக்கப்பட்ட பாலத்தை புனரமைக்க ஜப்பான் நிதியுதவி

March 17, 2026

ஜப்பான் தூதுவர் அகியோ இசொமட்டா, “அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP)” திட்டத்தின் கீழ் திட்டத்திற்கு நன்கொடை