விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப். 18) தெரிவித்தார்.
சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சாம்பியன்ஸ் ஆப் தமிழ்நாடு – ஐந்தாண்டு கால விளையாட்டுச் சாதனை விழா இன்று (பிப். 18) நடைபெற்றது.
இதில், விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் 62 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 178 விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் இன்று (பிப். 18) வழங்கினார்.