விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில் அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களிலும் நேற்று (02) மதிய உணவு இடைவேளையின் போது அடையாள கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் நேற்று மதிய உணவு இடைவேளையில் அடையாளப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துதல், மாணவர்கள் எதிர்நோக்கும் அடிப்படை வசதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது அரசாங்கத்திற்கு தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலான பதாதைகள் மற்றும் கோச அட்டைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி விக்னேஸ்வரன்,

தற்போது பல்கலைக்கழகங்களில் ஐந்து அணிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில், மேலும் இரண்டு அணிகளை உள்வாங்குவது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.

மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள், விரிவுரை மண்டபங்கள், ஆய்வுகூட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் போதியளவில் ஏற்படுத்தப்படாமல் மேலதிக மாணவர்களை இணைத்துக் கொள்வது உயர்கல்வியின் தரத்தைப் பாதிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்த விடயங்களில் அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்தி, பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, போராட்டத்தில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் சர்வேஸ்வரன், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் மாணவர்களும் அதற்கு ஆதரவு வழங்கியதாகத் தெரிவித்தார்.

உயர்கல்வித் துறையை தற்போதைய அரசாங்கம் வலுப்படுத்தும் என்ற நம்பிக்கை தமக்கு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, உயர்கல்வி தொடர்பான பொறுப்புகளைக் கொண்டுள்ள நாட்டின் தற்போதைய பிரதமர் முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளர் என்பதால், பல்கலைக்கழகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவர் நன்கு புரிந்துகொண்டு தீர்வு காண்பார் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், தற்போதைய நிலைமைகளைப் பார்க்கும்போது, தாம் கொண்டிருந்த அந்த நம்பிக்கை பொய்த்துப் போயுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் சர்வேஸ்வரன் கவலை வெளியிட்டார்.

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை

1291252

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? – ‘துக்ளக் தர்பார்’ முடிவைக் கைவிடச் சீமான் கடும் கண்டனம்!

September 12, 2026

சென்னை: ரூ. 1,200 கோடியில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட

solomon-pappaiah

பட்டிமன்ற பிதாமகனின் சகாப்தம் நிறைவு: முழு அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!

September 12, 2026

மதுரை: மறைந்த மூத்த தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் (90) உடல், மதுரை தத்தனேரி மின்

minister-vinoth (1)

ஆய்வுக் கூட்டத்துக்குச் செல்லும் வழியில் மனிதநேயம்: விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர் வினோத்!

September 12, 2026

கும்பகோணம்: கும்பகோணம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களுக்கு, அவ்வழியாகச் சென்ற

9712_1_9_2026_12_31_11_2__DSC4468

திருச்சி முக்கியக் கோயில்களில் செல்போன் பாதுகாப்புக்கான கட்டணம் ரத்து: பக்தர்களுக்கு இலவச வசதி!

September 12, 2026

திருச்சி: திருச்சியில் உள்ள 5 பிரதான கோயில்களில் பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாப்பு அறையில் வைப்பதற்காக வசூலிக்கப்பட்டு வந்த கட்டண முறை