பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வென்னப்புவ, லுணுவில பகுதியில் உலங்குவானூர்தியை தரையிருக்கும் வேளையில் இடம்பெற்ற விபத்தில், உயிரிழந்த இலங்கை விமானப் படை விமானி விங் கமாண்டர் நிர்மலா சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகாப்டரை தரையிறக்க முயன்றபோது விபத்துக்குள்ளான வேளையிலேயே, அதன் தலைமை விமானியான விங் கமாண்டர் நிர்மலா சியம்பலாபிட்டிய இவ்வாறு உயிரிழந்தார்.
By C.G.Prashanthan