விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தும் போது தொலைபேசி பாவனை!

பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும்போது கைப்பேசியைப் பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலைச் சாரதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளில் ஈடுபடும் சாரதிகள் தொடர்பில் பொதுமக்கள் 0719090900 என்ற இலக்கத்திற்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலையைச் சேர்ந்த சாரதி ஒருவர், பேருந்தைச் செலுத்திக் கொண்டிருக்கும்போது கைப்பேசியைப் பயன்படுத்தியமை தொடர்பில் எமக்கு ஆதாரத்துடன் முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இச்செயற்பாடு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய முகாமையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

அதற்கமைய, சம்பந்தப்பட்ட சாரதிக்கு 3 நாட்கள் கட்டாய மீட்டல் பயிற்சி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எனக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து அல்லது அரச பேருந்துகளாக இருப்பினும், பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறிச் செயல்படும் சாரதிகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

சாரதிகள் வாகனம் செலுத்தும்போது கைப்பேசி பேசுதல், அதிவேகமாகச் செலுத்துதல் அல்லது கவனயீனமாகச் செயற்படுதல் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால் அதனை ஒளிப்படம் அல்லது காணொளியாக எடுத்து 0719090900 என்ற இலக்கத்திற்கு வாட்ஸ்அப் (WhatsApp) ஊடாக ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க முடியும்.

அவ்வாறு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றித் துரித நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

usa canada

சில கனடியப் பொருட்கள் மீதான 50% வரியை நீக்குகிறார் ட்ரம்ப்; நமக்குத் தெரிந்தவை என்ன?

October 24, 2026

வெள்ளை மாளிகை கனடியப் பொருட்கள் மீதான தனது வரி விதிப்பில் (tariff regime) மீண்டும் ஒரு பரந்த அளவிலான மாற்றங்களைச்

ac

இணுவில் சந்தியில் வீதி விபத்து – 67 வயதுடைய முதியவர் உயிரிழப்பு!

October 24, 2026

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி, இணுவில் சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 67 வயதுடைய முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே

ss

யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து 18 பவுன் நகை கொள்ளை!

October 24, 2026

யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில், இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து களவாடப்பட்ட நகைகளில்

Rain

வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மழை அதிகரிக்கக்கூடும் எச்சரிக்கை!

October 24, 2026

வங்காள விரிகுடாவின் வட அந்தமான் தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (24)

dailythanthi_2026-10-23_jo8jm3xc_Untitled-1 - Copy

“நாகூர் தர்காவுக்கு 45 கிலோ விலையில்லா சந்தன கட்டைகள்!” – முதல்-அமைச்சர் விஜய் அரசாணை வழங்கினார்!

October 23, 2026

சென்னை: கந்தூரி விழா: நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் பெரிய ஆண்டவர் கந்தூரி விழா வெகு விமரிசையாக

harry meghan

பிள்ளைகளின் பாதுகாப்பே முக்கியம்” – தந்தை மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஹரியின் மனைவி மேகன் கருத்து!

October 23, 2026

பிலிப்பைன்ஸிலுள்ள தனது தந்தையின் முன்னாள் வீட்டில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்துத் தாம் شدید

trump june 26

கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் சாத்தியம்: ஆனால் அனைத்து அதிகாரங்களும் எம்மிடமே உள்ளன – டொனால்ட் டிரம்ப்!

October 23, 2026

. அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் நிலை நெருங்கியுள்ள போதிலும், பேச்சுவார்த்தைகளில் அனைத்து அதிகாரங்களும் (Cards) அமெரிக்காவின்

karthika

“கோமாளிகளிடம் ஆட்சி அதிகாரம் இல்லாமல் போராளிகளிடம் கிடைக்க வேண்டும்!” – சிறையிலிருந்து விடுதலையான கார்த்திகா ஆவேசம்!

October 23, 2026

கோவை: வாழ்நாள் பெருமை: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வழக்கில் கைதாகி பிணையில் விடுதலையான நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை

sanga

இலங்கையின் வரலாற்றுச் சாதனை: குமார் சங்கக்கார பாராட்டு!

October 23, 2026

பவன், தசுன், ஜனித் மற்றும் அவிஷ்க ஆகியோரின் சிறப்பான ஆட்டத்திறனால் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெரிதும்

09a2de010060025c4d4664fd0e465b141779615687917113_original

“மன்னிப்பு கோர முடியாது!” – எடப்பாடி பழனிசாமி குறித்த கருத்தில் அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டம்!

October 23, 2026

சென்னை: அதிமுக நோட்டீஸ்: அதிமுகவின் சொத்துகளை அபகரிப்பதாகவும், கட்சியை லெட்டர் பேட் கட்சியாகவும் மாற்றி விட்டதாகவும் எடப்பாடி பழனிசாமியை தவெக

sh

ஷமோண்டா கால்நடை வைரஸ் மனிதனைத் தாக்கியது!

October 23, 2026

கால்நடைகளைப் பாதிக்கும் ஷமோண்டா (Shamonda) வைரஸ் மனிதர் ஒருவர் உடலில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் கடந்த மாதத் தொடக்கத்தில் உயிரிழந்துள்ளதாகவும்

1200-675-26812339-thumbnail-16x9-nil

“முதல்வரின் மேஜையில் உள்ள 3 ஊழல் கோப்புகள் விரைவில் வெளியாகும்!” – அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

October 23, 2026

திருநெல்வேலி: ஊழல் கோப்புகள்: தமிழக முதல்வரின் மேஜையில் உள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான 3 கோப்புகள் விரைவில் வெளியாகும் என்றார்