விஜய்யின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் புதிய மனு

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், விஜய் மீது அதிரடியான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தற்போது தமிழக அரசியலிலும், சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட விஜய் – சங்கீதா தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே பொது நிகழ்வுகளில் சங்கீதா பங்கேற்காமல் இருந்து வந்த நிலையில், அண்மையில் அவர் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்தார்.

இந்த மனுவில், “விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், அதனால் தனக்குக் கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும்” சங்கீதா குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான விவாதங்கள் பூதாகரமான நிலையில், விஜய் ரசிகர்கள் இணையங்களில் தன்னை ஆபாசமாக விமர்சிப்பதாக சங்கீதா தரப்பு வேதனை தெரிவித்தது. இதனை அனைத்திந்திய மாதர் சங்கமும் வன்மையாகக் கண்டித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண விழாவிற்கு, நடிகர் விஜய் நடிகை திரிஷாவுடன் ஒரே காரில் வந்திறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. சொந்தக் கட்சித் தொண்டர்களே இந்த விவகாரத்தில் விஜய்க்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவிட்டு வரும் நிலையில், சங்கீதா தரப்பில் தற்போது புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

“விஜய்யுடன் 26 ஆண்டுகள் வாழ்ந்து இரண்டு குழந்தைகளைப் பெற்று வளர்த்துள்ளேன். அவர் வசிக்கும் நீலாங்கரை இல்லத்தில் எனக்கும் சரிபாதி உரிமை உள்ளது. ஆனால், இப்போது அந்த இல்லத்திற்குள் நுழைய விஜய் எனக்கு அனுமதி மறுக்கிறார்.”

மேலும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

• தங்குவதற்கு இடமில்லை: “பிரிட்டன் குடியுரிமை கொண்டு லண்டனில் வசிப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும்போது சென்னையில் தங்குவதற்கு எனக்கு வேறு வீடு இல்லை.”
• நீதிமன்ற உத்தரவு: விவாகரத்து வழக்கு முடியும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்கத் தனக்கு அனுமதி வழங்கி, விஜய்க்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
• ஜீவனாம்சம்: “திரைப்படங்களில் கோடி கோடியாகச் சம்பாதிக்கும் விஜய், எனக்கும் குழந்தைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சத்தை வழங்க வேண்டும். பரஸ்பரம் பிரிந்து செல்ல அவர் ஒத்துழைக்க மறுக்கிறார்.”

puputhu

ஆகஸ்ட் மாதம் முதல் மின்வெட்டு ஏற்படும் அபாயம் – முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை

March 9, 2026

நாட்டில் கடந்த பத்து நாட்களாக நிலக்கரி ஏற்றிய கப்பல்கள் எதுவும் வருகை தராத காரணத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல்

ni

புதிய தவிசாளராக றியாஸ் ஆதம் தெரிவு!

March 9, 2026

நிந்தவூர் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதுடன் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார். அம்பாறை

en

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி விபத்தில் உயிரிழப்பு

March 9, 2026

இன்று (09) மாலை வாத்துவ ரயில் நிலையத்திற்கும் பின்வத்தை ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள ரயில் பாலத்தின் மீது, இரண்டு

fire

கடும் வறட்சி; பற்றி எரியும் காடு

March 9, 2026

மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலையைத் தொடர்ந்து, ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியின் அளுத்கம பகுதியில் நேற்று

ha

“வளமான நாட்டின் அபிமானம் – அவளே நாட்டின் முன்னோடி” – பிரதமர்

March 9, 2026

பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் சட்டப் புத்தகங்களுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், அவை ஒவ்வொரு பெண்ணும் நிஜ வாழ்க்கையில்

arrest

பல  காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது 

March 9, 2026

ஹட்டன் பகுதியில் பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப்

wil

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

March 9, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கை

keri

கேரி கிர்ஸ்டன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம்

March 9, 2026

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன்

thekk

வன்னியில் தேக்குமரக் குற்றிகளை கடத்திய சாரதி கைது

March 9, 2026

வன்னி பகுதியில் இருந்து தேக்குமரக் குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த லொறி ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் புத்தூர் சந்தி பகுதியில்

pu

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து

March 9, 2026

ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முஜ்தபா காமேனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு

sa vas

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது

March 9, 2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை

ta

தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயம்

March 9, 2026

பத்தேகமவில் உள்ள பாடசாலையொன்றில் இன்று (9) மதியம் தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பத்தேகம