சென்னை:
விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக வாக்குச் சரிவு:
சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இடைத்தேர்தலில் தவெக தலைமையிலான கூட்டணி மக்களின் ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவின் வாக்கு வங்கிதான் பெரிய அளவில் சரிவைச் சந்தித்துள்ளது. அவர்கள் வெற்றி பெற்றால் மீண்டும் கட்சி மாற வாய்ப்புள்ளது என மக்கள் நினைத்திருக்கக்கூடும்,” என்றார்.
பாமக வாக்குகள்:
“யாரையும் ஆதரிக்காத பாமகவின் வாக்குகள் அப்படியே தவெகவுக்கு வந்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். விசிக இடம்பெறும் அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள்? தவெகவுக்குப் பாமகவினர் வாக்களித்தார்கள் எனக் கூறுவது விசிகவின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் நோக்கமாகும். 2 தொகுதிகளிலும் தவெக வெற்றிக்கு விசிகவின் வாக்குகளே பயன்பட்டுள்ளன,” என அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
#Thirumavalavan #VCK #TVK #PMK #Byelection #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive'”