குற்றச் செயல்களை கண்டறிவதும் விசாரணை செய்வதும் நூற்றுக்கு 50 முதல் 60 வீதம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
பொல்பித்திய பொலிஸ் நிலைய திறப்பு விழாவின் போதே பொலிஸ் மாஅதிபர் இதனை தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மாஅதிபர் மேலும் தெரிவிக்கையில்,
2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2025 ஆம் ஆண்டில் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
அத்துடன் 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2025 ஆம் ஆண்டில் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக பொலிஸ் மாஅதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.