விக்ரம் – 63 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம் வீர தீர சூரன் – 2 படத்தைத் தொடர்ந்து மாவீரன் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், சில காரணங்களால் அப்படம் துவங்கவில்லை.
தொடர்ந்து, அறிமுக இயக்குநர் பொடி கே. ராஜ்குமார் இயக்கத்தில் விக்ரம் தன் 63-வது படத்தில் நடிக்க உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முழு ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.