வவுனியா ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (27) அதிகாலை இடம்பெற்றிருந்ததுடன் ஏ 9 வீதியின் போக்குவரத்தும் சுமார் 03 மணிநேரம் தடைப்பட்டதுடன் நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்து நிற்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
குறித்த விபத்தானது அதிக விபத்தானது அதிக பனிமூட்டம் காரணமாக இடம் பெற்றிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன், மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.