யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறை இரத்ததான சங்கம்நடாத்திய இரத்ததான முகாமில் 90 பேர் இன்று இரத்ததானம் செய்துள்ளனர்.
வல்வெட்டித்துறை நெடியாகாடு கணபதி மஹால் திருமண மண்டபத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 3.30 கொட்டும் மழையிலும் 71 ஆண்களும் 19 பெண்களுமாக
90 பேர் இரத்ததானம் செய்தனர்.
குருதியினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியினர் வருகைதந்து இரத்தத்தை பெற்றுக்கொண்டனர்.