வல்வெட்டித்துறைத்துறையில் நடந்த தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மாநாடு

வல்வெட்டித்துறைத்துறையில் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மாநாடு இடம்பெற்று 55 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, அதன் வரலாற்றை வால்வெட்டித்துறை நகரசபையின் தலைவரான எம்.கே சிவாஜிலிங்கம் எடுத்துரைத்துள்ளார்.

நேற்று இரவு வல்வெட்டித்துறை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அதில், தமிழ்த் தேசியக்கட்சியின் வடமராட்சி – வல்வெட்டித்துறை அமைப்பாளரான விமலதாஸ் கவிச்செல்வன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினரான செல்வராசா விதுசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 1971 ஆம் ஆண்டு மாசி மாதம் 07ஆம் திகதி தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மாநாடு யாழ்ப்பாணம் வடமராட்சி – வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது.

அன்று வல்வெட்டித்துறை நகரசபை தலைவராக இருந்த ஞானமூர்த்தி, சபாரத்தினம்பிள்ளை, அரச நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக இருந்த வேற்பிள்ளை ஆகிய மூவரும் மக்களுடன் இணைந்து தமிழ்க் கட்சிகளினுடைய ஒற்றுமை மாநாட்டைக் கூட்டி இருந்தார்கள்.

அத்துடன், 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டு வர எடுத்த முயற்சியை தொடர்ந்து தமிழ்மக்களிடம் ஒற்றுமை வர வேண்டும் என்ற அடிப்படையிலே இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழர் சுயாட்சிக் கழகம், ஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணி ஆகிய நான்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டு அன்றைய யாழ்ப்பாண மேயராக இருந்த நாகராஜா தலைமையிலே ஒற்றுமை மாநாடு வல்வெட்டித்துறையில் உள்ள எட்வேர்ட் தங்கவடிவேல் ஐயாவின் வீட்டில் இடம்பெற்றது.

அதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நூற்றுக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இலங்கை அரசாங்கத்தை நோக்கி ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வைப்பதென்றும், இந்த நான்கு கட்சிகளும் ஒற்றுமையாக இயங்குவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டு இது தமிழர்களினுடைய ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என அறிவிக்கப்பட்டது.

அப்போது, ஆதரவாளர்களோடு இணைந்து வெடி கொழுத்தி பாடசாலை மாணவனாக நானும் மகிழ்ச்சியிலே ஆரவாரப்பட்டதனை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

இப்போது அநுர அரசிலும் ஒரு புதிய அரசியலமைப்பு வந்திருக்கின்ற நிலையில் நாங்கள் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபட்டு கட்சிகளிடையே ஒரு பொது உடன்பாட்டை எட்டி ஒரே கோரிக்கையை நாங்கள் வைப்போமாக இருந்தால் அது மிகவும் பலம் பொருந்தியதாக இருக்கும்.

அத்துடன், கடந்த 1976 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 14 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மான பிரகடனத்திலே இது “வல்வெட்டித்துறையிலே கருவாகி திருகோணமலையிலே உருவாகி” என்கிற வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன என சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வரலாற்று சம்பவம் இடம்பெற்று 55 ஆண்டுகள் நேற்றோடு நிறைவடைந்திருக்கின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு

tea

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்கான அதிபர் பதவிகளைப் பொறுப்பேற்க தயங்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள்?

March 3, 2026

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் பதவிகளுக்கு, அச்சேவையைச் சேர்ந்த பெரும்பாலான அதிகாரிகள் விண்ணப்பிக்க முன்வரவில்லை என்று ஆசிரியர்

d

நாட்டின் பிரதம நீதியரசர் மன்னாருக்கு விஜயம்

March 3, 2026

ட்டின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாருக்கு விஜயம்

nan

‘சாகர’, ‘நந்திமித்திர’ கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன!

March 3, 2026

இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கிழக்கு இந்தியப் பெருங்கடல் கடற்கரையை மையமாக கொண்டு பெப்ரவரி 18 முதல் 26 வரை

iran

ஈரானில் இதுவரை 787 பேர் உயிரிழப்பு – செஞ்சிலுவைச் சங்கம்

March 3, 2026

ஈரான் மீது இடம்பெற்ற அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களின் விளைவாக இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தகவல்

cham

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணி இடைநிறுத்த விவகாரம்: ரிட் மனு மார்ச் 18 இல் விசாரணைக்கு!

March 3, 2026

எவ்வித நியாயமான விசாரணையுமின்றி தனது பணி இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் ரிட் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்றத்தின்

amazo

அமேசான் நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் நிறுவனத்தின் பல

masoo

அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெறுகின்றன – ஈரான் ஜனாதிபதி

March 3, 2026

தனது நாட்டுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஈரான்

Ruvan Ranasinga

சுற்றுலாப் பயணிகளின் வருகை சரிவு?

March 3, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை அடைய முடியவில்லை