வலிகாமம், ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலை முழுமையாக விடுவிக்குமாறு கோரிக்கை!

வடக்கில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்ட ஒரு கோயிலை முழுமையாக விடுவிக்குமாறு உள்ளூர் தமிழ் சைவர்கள் உரிய அதிகாரிகளிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம், வலிகாமம், ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதையை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இலங்கை இராணுவம், தமிழர்களின் தனியார் காணியை தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கிலேயே மாற்றுப் பாதையை விரிவுபடுத்தும் பணியை ஆரம்பித்துள்ளதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.

தனியார் காணியின் ஊடாக ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்ல இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீதியை அகலப்படுத்தும் முயற்சி, உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பினையடுத்து இராணுவத்தால் கைவிடப்பட்டுள்ளது.

இராஜேஸ்வரி அம்மன் கோயிலும் அதன் சுற்றுப்புறப் பகுதியும் ஜூன் 15, 1990 அன்று உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது.

மே 2002 முதல் விசேட அனுமதியின் பின்னர், ஒரு சிலருக்கு மாத்திரம் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

போர் தீவிரமடைந்ததால், ஜூன் 2006இல் அந்த அனுமதியும் நிறுத்தப்பட்டதோடு, நல்லாட்சி அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன், ஒன்பது வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாக உள்ளூர்வாசிகளுடன் கோயிலுக்குச் சென்றார்.

பெப்ரவரி 3, 2015, மகா சிவராத்திரி முதல் இராணுவ அனுமதி பெற்றவர்கள் மாத்திரமே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதாக, ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய நிர்வாகக் குழு கூறுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், ஜூன் 24, 2023 அன்று வடக்கில் 234 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதை ஒட்டி, சைவர்கள் மீண்டும் ஆலயத்தில் வழிபட அனுமதிக்கப்பட்டனர். எனினும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என்ற நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதையை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட, விவசாய நிலங்கள் உட்பட தமிழ் மக்களின் தனியார் காணிகளில் ஆலயத்திற்குச் செல்வதற்கான தற்காலிக பாதை அமைக்கப்பட்டதாக பிரதேசத்தின் குடிமக்கள் சமூக அமைப்புப் பிரதிநிதிகள் வலியுறுத்துகின்றனர்.

கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதையையும் அதைச் சுற்றியுள்ள பல ஏக்கர் நிலத்தையும் இராணுவம் இன்னும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், தமிழ் மக்களின் தனியார் நிலங்கள் வழியாக கோயிலுக்குச் செல்லும் தற்காலிக பாதையை நிரந்தர பாதையாக மாற்றும் நோக்கத்துடன் பெப்ரவரி 16ஆம் திகதி பணியை ஆரம்பித்த இராணுவம், உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பையடுத்து கைவிட்டதாக, வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவிக்கின்றார்.

இராணுவத்தின் முயற்சிகள் குறித்து தெல்லிப்பழை பிரதேச செயலகம் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதேச சபைத் தலைவர், கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதைக்கு அருகில் தற்போது இராணுவ முகாம் இல்லாவிட்டாலும், இராணுவ வாகன பழுதுபார்க்கும் நிலையம் ஒன்று இன்னும் அந்த இடத்தில் காணப்படுவதாகவும் வலியுறுத்துகிறார்.

வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தை உடனடியாக அகற்றுமாறும், இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பழைய வீதியை பக்தர்களுக்காகத் திறக்குமாறும், கோயிலுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குமாறும் பிரதேசத்தின் தமிழ் சைவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மக்களின் விவசாய நிலங்கள் வழியாக இராணுவத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக வீதிக்கு பதிலாக, கோயிலுக்குச் செல்லும் பழைய வீதியை விடுவிக்கவேண்டும் என வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சுப்பிரமணியம் ரொசாந்த்குமார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“மக்களின் காணியில் பாதி இராணுவத்தின் கீழ் உள்ளது. அவர்கள் இந்த விவசாய காணிகள் வழியாக ஒரு வீதியை அமைத்து, மக்கள் அதை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கின்றனர். இது கோவிலுக்குச் செல்லும் பழைய வீதி விடுவிக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சியாகும். அவர்கள் வீதியை மாற்றுகிறார்கள். அவர்கள் இந்த தற்காலிக வீதியை அமைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், மக்கள் பழைய வீதியை கோருகின்றனர். பழைய வீதியை நிச்சயமாக விடுவிக்கவேண்டும்” என்றார்.

இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீதியால் சில தனியார் காணிகள் பிரிக்கப்பட்டுள்ளதாக பொது பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

மேலும், தற்காலிக வீதியை நிரந்தரமாக மாற்றினால், மக்கள் தமது காணி மீதான உரிமையை இழக்க நேரிடும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

WhatsApp Image 2026-09-22 at 10.27.15 AM

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் !

September 22, 2026

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் தீர்மானத்தை சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு அறியப்படுத்தியுள்ளார். அதன்படி, குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகள்

court-judge-hammer-gavel-696x398

22வது திருத்தம் -சர்வஜனவாக்கெடுப்பு அவசியமில்லை மூன்றில் இரண்டுடன் நிறைவேற்றலாம் என நீதிமன்றம் தீர்மானம்

September 22, 2026

அரசியலமைப்பின் 22வது திருத்தத்தின் சரத்துக்கள் அல்லது எந்தவொரு பகுதிக்கும் அரசியலமைப்பின் 83வது உறுப்புரையின் விதிகளுக்கு அமைவாக சர்வஜனவாக்கெடுப்பின் மூலம் மக்களின்

Thileepan

திலீபன் சிலை திறப்பு நிகழ்வில் மாணவர்களை பங்கேற்கச் செய்தமை குறித்து விசாரணை?

September 22, 2026

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திலீபனின் நினைவாக அமைக்கப்பட்ட சிலை திறப்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்களைப் பங்கேற்கச் செய்தமை தொடர்பில் விசாரணை

dsa

இலங்கைக்கான ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் 2026 பயிற்சித் திட்டங்கள் ஆரம்பம்

September 22, 2026

இலங்கைக்காக ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தினால் 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் பயிற்சித் திட்டங்களின் தொடரை ஆரம்பித்து

photo-collage.png

தியாக தீபம் திலீபன் நினைவாக சித்திரப் போட்டிகள்

September 22, 2026

​அடுத்தடுத்த சந்ததிகளுக்கு எமது வரலாற்றைக் கடத்தும் முகமாக தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவைப் போற்றி நடாத்தப்படும் சித்திரப் போட்டி…

Gnanasa

நான் மீண்டும் சிறைக்குச் செல்ல நேரிடலாம்!

September 22, 2026

நான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதாலேயே தனது 87 வயதான தாயாருடன் இணைந்து

va

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

September 21, 2026

மேற்கு – மத்திய மற்றும் அதனை அண்மித்த மத்திய- கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பிரதேசம்,

CM-Vijay-2

“அக். 2 காந்தி ஜெயந்தி முதல் ‘வெற்றிப் பயணம்’ திட்டம்!” – முதல்வர் விஜய் அறிவிப்பு!

September 21, 2026

சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், மறைந்த தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளான

790457579_1953889535287104_7272108374973593865_n

மதுராந்தகத்தில் அக். 3-இல் மு.க.ஸ்டாலின் சூறாவளிப் பிரச்சாரம்!

September 21, 2026

சென்னை: அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதியில், திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமனை ஆதரித்துப்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“ஜெம் வீரமணி விவகாரம் மு.க.ஸ்டாலினுக்குத் தெரியாமல் நடந்திருக்காது?” – அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி குற்றச்சாட்டு!

September 21, 2026

சென்னை: தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார்,

1200-675-27679355-thumbnail-16x9-ajith

“அஜித்துக்காகக் காத்திருக்கும் பொதுச்செயலாளர் பதவி!” – ரசிகர்கள் தொடங்கிய ‘தமிழக மக்கள் கழகம்’ (TMK)

September 21, 2026

கள்ளக்குறிச்சி: முதலமைச்சர் விஜய்யின் அரசியல் வெற்றியால் உந்தப்பட்ட நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் ‘தமிழக மக்கள் கழகம்’

618c12f4bb64efc3583f8a25311d96ad

“ஜெம் வீரமணி வழக்கில் யாரையும் தப்பவிடக் கூடாது!” – முதலமைச்சர் விஜய் காவல் துறைக்கு அதிரடி உத்தரவு

September 21, 2026

சென்னை: ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி மீதான சிறுமி வன்கொடுமை (போக்சோ) வழக்கில் தொடர்புடைய ஒருவரைக் கூடத் தப்பவிடக் கூடாது