சென்னை:
சட்டசபை வரலாற்றில் புதிய சாதனை
தமிழக சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக எவ்வித இடைவேளையும் இன்றி 10 மணிநேரம் தொடர்ந்து நடைபெற்றுப் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. நேற்றைய சட்டசபை அலுவலவுகள் இரவு 7 மணியையும் தாண்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சபாநாயகரின் புதிய முயற்சி
தமிழக சட்டசபை நிகழ்வுகள் கடந்த காலங்களில் பொதுவாகக் காலையில் தொடங்கி அதிகபட்சமாகப் பிற்பகல் 3 அல்லது 4 மணி வரை நீடிப்பது வழக்கம். இதையே நீண்ட நேரம் நடைபெற்றதாக எம்.எல்.ஏ.க்கள் கூறுவதுண்டு. ஆனால், தற்போது த.வெ.க. ஆட்சியில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கடந்த சில தினங்களாக ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகளின் போது, வெட்டுத் தீர்மானத்தில் பெயர் கொடுத்திருந்த எம்.எல்.ஏ.க்கள் விவாதித்த பிறகு, மற்ற எம்.எல்.ஏ.க்களையும் தங்களது கோரிக்கைகளைக் கூற அவர் அழைப்பு விடுத்தார். இதன் மூலம் தினமும் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அவையில் பேசி, தங்களது தொகுதியின் முக்கியக் கோரிக்கைகளை முன்வைக்கச் சிறப்பான வாய்ப்பு கிடைத்தது.
உடனடித் தீர்வும் சபாநாயகரின் பாராட்டும்
நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், காலையில் உறுப்பினர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதிலை அரசு அதிகாரிகளிடம் இருந்து உடனடியாகப் பெற்று, அவற்றை மாலை நேரத்திலேயே அறிவிப்புகளாக அவையில் வெளியிட்டார். அமைச்சரின் இந்தத் துரித நடவடிக்கையைச் சபாநாயகர் வெகுவாகப் பாராட்டினார். “இதுதான் ஒரு அமைச்சரின் பொறுப்புக்கான சிறந்த உதாரணம்” என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
10 மணி நேரத் தொடர் அமர்வு
எம்.எல்.ஏ.க்கள் பலரையும் கேள்விகள் கேட்க அனுமதித்ததால், அவை நடைபெறும் நேரம் கடந்த சில நாட்களாகவே மாலை 6 மணியைத் தாண்டிச் சென்றது. அதன் உச்சமாக நேற்று காலை 9.30 மணிக்குத் தொடங்கிய அவை இரவு 7.13 மணிவரை நீடித்தது.
அந்த வகையில் சுமார் 10 மணி நேரம் அவை அலுவல்கள் நேற்று இடைவிடாமல் நடைபெற்றுள்ளன. இதுவே தமிழக சட்டசபை வரலாற்றில் இடைவெளி விடாமல் தொடர்ந்து அவை அதிகபட்சமாக நடைபெற்ற நேரமாகக் கருதப்படுகிறது.
#TNAssembly #TamilNaduLegislativeAssembly #JCDPrabhakar #MinisterAnand #TVKGovernment #TamilNaduPolitics #TNPolitics #ChennaiNews #RecordAssemblySession #TamilNaduNews #TamilNews #LatestNewsTN #TrendingTN #PoliticalUpdates #TNNewsUpdates